பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 . மாலை பூண்ட Lo

அன்று: நெஞ்சறிசுட்டு. தடுத்து ஆண்டுகொண்டாய் என்றது. தாமே அன்னையைப் புகலடையாமல் இருக்கும் நிலையில் அவளே கருணை கூர்ந்து வலிய வந்து தம் போக்கைத் தடுத்து ஆட்கொண்டாள் என்று சொன்னபடி ஆயிற்று. நாயேனேயும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து, நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய்” (61) என்று பின்னுல் ஒரு பாட்டில் விளக்கமாகச் சொல்வார். ஆண்டாய் என்மைல் ஆண்டுகொண்டாய் என்றமையால், ஆள்வதில் அன்னைக்கு இருந்த ஊக்கம் புலகிைறது. அல்ல என்பது இல்லை என்னும் பொருளில் வந்தது. என்செயினும் என்று பொதுவாகச் சொன்னலும், எம்பெரு மாட்டியின் திருவுள்ளத்துக்கு உவப்பாகாத தீய செயல் களையே கொள்ளவேண்டும். கரையேற்றுகை என்பதை என் செயினும் என்பதனோடு பொருத்தும்போது காப்பாற்றுதல் என்று பொருள்கொள்க. திருவுளமே என்பதில் உள்ள ஏகாரத்தைப் பிரித்துக் கரையேற்று கையே என்று கூட்டவேண்டும்; அன்றி நின்றவாறே தேற்றேகாரமாகக் கொள்வதும் ஒன்று. உமா என்பது உமை என்று வந்தது. அவள் என்பது பகுதிப் பொருள் விகுதி. - .

- இது அபிராமி அந்தாதியில் 30-ஆவது பாடல்.