பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. மாலை பூண்ட மலர்

என்பது நன்னூல் சூத்திரம். ஆண்பாலையும் பெண்பாலேயும் மதிப்பாகக் குறிக்கும்போது ஒருவர் என்றும் அவர் என்றும் சொல்கிருேம். இதற்கு இலக்கணம் இது. ஒருவனுகவும் ஒருத்தியாகவும் இல்லாமல் இரண்டும் கலந்த ஒற்றைத் திருவுருவத்தைக் குறிக்கவும் அந்தச் சொல் பயன்படுகிறது. இதைத்தான் குமரகுருபரர் பாடுகிரு.ர்.

'அருவருக்கும் உலகவாழ்வு அடங்க நீத்தோர்க்கு

ஆனந்தப் பெருவாழ்வாம் ஆடல் காட்ட மருவருக்கன் மதிவளிவான் யமானன் தீநீர்

மண்ணெனும் எண் வகை உறுப்பின் வடிவு

- . . & , கொண்ட ஒருவனுக்கும் ஒருத்திக்கும் உருஒன் ருல் அவ்

வுருவை இ ஃதொருத்தன் என்கோ ஒருத்தி என்கோ இருவருக்கும் உரித்தாக ஒருவர் என்ருேர்

இயற்சொல்இல தெனின் யான்மற் றென்சொல்

- . கேனே , '

. (சிதம்பரச் செய்யுட்கோவை, 54) இந்த அர்த்தநாரீசத் திருக்கோலமே முதல் முதல் இறைவன் சகுண மூர்த்தியாகத் தோன்றிய வடிவமாதலின்

இதை, தொன்மைக் கோலம்' என்று மாணிக்கவாசகர்

கூறுவார்.

அன்னை வேறு, அத்தன் வேறு என்று இல்லாமல் ஒருவருள் ஒருவர் அடங்கி நிற்பர். சைவர்கள் சிவத்துள் சக்தி அடங்கி நிற்கும் என்பர். சாக்தர்கள் பரதேவதை யிடம் யாவரும் ஒடுங்குவர் என்பர். அப்படி ஒன்ருக இருந்த பொருள் பாதிப் பாதி வேறு வேறு தோற்றமாகி வெளிப் படுகிறது. பிறகு தனியே பிரிந்தும் இயங்கி அருள் செய்யும்

நிலை உண்டாகிறது. - ‘. . .

அபிராமிபட்டர் பாதியும் பாதியும் இணைந்த ஒரு திருக் கோலமாகிய அர்த்தநாரீச மூர்த்தியை எண்ணுகிரு.ர்.