பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 மாலை பூண்ட மலர்

எம்மையும் தம்மிடம் அன்பு செய்யும்படியாக வலியத் தடுத்து ஆண்டுகொண்டு நியமித்தார்கள்; இனிமேல், நாம் புகுந்து கதியடைய ஏற்றது எது என்று ஆராய்வதற்கு வேறு சமயங்களும் இல்லை; முக்தி பெறுவது உறுதியாதலின் எம்மை இவ்வுலகில் பெற்றெடுப்பவளாகிய தாயும் இனி மேல் இல்லை; மூங்கிலப்போன்ற தோளையுடைய பெண் களின் மேல் வைத்த ஆசையும் இனிப் போதும்.

எமையும் என்றது, ஆட்கொள்ளப்பெற்ற பெருமித உணர்ச்சியால் சொன்னதாகவும் கொள்ளலாம்; "நாமார்க் கும் குடியல்லோம்' என்றதுபோல. எமையும்: உம்மை, ஆளப்பெற்றவர் இழிவைக் குறித்து அதன் வாயிலாக ஆண்டவரின் உயர்வைப் புலப்படுத்தியது. இனி என்பது இனிமேல் என்னும் பொருளுடையது. இனி என்பதற்குப் பழங்காலத்தில் இப்பொழுது என்றே பொருள் கொண்டனர். இக்காலத்தில் இந்தப் பொழுதுக்கு அப்பால் என்ற பொருளில் வழங்குகிறது. இனிச் சமயங்களும் இல்லை, இனித் தாயும் இல்லை, இனி அமையும் என்று மூன்றிடத்தும் கூட்டுக. அமையும் - போதும்; இல்லாமற் போய்விடும் என்றும் கொள்ளலாம், அமை - மூங்கில். உறு: உவம வாசகம்.)

இது அபிராமி அந்தாதியில் 31-ஆவது பாடல்.