பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமல முத்திரை 53

உலகில் வாழும்போதே அருட்பலம் பெற்று, அந்த உறுதியால் யமனைப்பற்றிக் கவலையின்றியிருந்த பேரன்பர் கூட்டத்தைச் சேர்ந்தவர் அபிராமிபட்டர். அவர் அபிராமி யின் திருவருட் பலத்தினல் அத்தகைய உறுதியான நிலையைப் பெற்றவர். அந்த நிலையில் இருந்து அவர் பாடுகிரு.ர்.

பொதுவாக மனிதர்கள் பிறவிமேல் பிறவியாக ஓயாமல் பெற்று அலைந்து திரிகிரு.ர்கள். அதற்கு மூலம் ஆசை, ஆசை காரணமாகவே பிறப்பு வருகிறது.

"அவாளன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்

தவா,அப் பிறப்பினும் வித்து'

என்பது திருக்குறள். ஆசை அளவற்றது. மனிதன் தன் இந்திரியங்களைத் திருப்திப்படுத்த வேண்டிப் பலபொருள் களை நாடுகிருன். ஆசைப்பட்ட பொருள் கிடைத்துவிட்டால் அதனேடு நிறைவு பெறுவது மனத்தின் இயல்பு அன்று. அநுபவிக்க அநுபவிக்க மேலும் மேலும் அதை விரும்பியே தாவுகிறது. நெருப்பை நெய்விட்டு அவிக்கமுடியுமானல் ஆசையையும் போகத்தை நுகர்ந்து போக்கிவிடலாம். இரண்டும் இயலாத காரியம். ஆசை வர வர வளர்ந்து வருகிறது. ஆசைக்கோர் அளவில்லை' என்பர் தாயுமான வர். அளவில்லாத பொருள்களுக்குக் கரையில்லாத கடலே உவமை கூறுவது மரபு. ஆகவே ஆசையும் கடல் போன்றது அதன் அளவு கண்டு கடந்து கரை ஏறுவது என்பது அரி. தினும் அரிய செயல்.

அளவு கடந்து ஆசை பெருகப் பெருக, அத்ன் விளை வாகப் பிறப்பும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. ஆசை கடலானல் அதல்ை உண்டாகும் பிறப்பும் பெரிய கடல் ஆகும். பிறவிப் பெருங்கடல்" என்பது திருக்குறள் அல்லவா? - " .