பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 மாலை பூண்ட மலர்

பிறப்பு வந்தால் தொடர்ந்து இறப்பும் உண்டு. பிறப்பும் இறப்பும் மாறிமாறி வரும். ஒரு புத்தகத்தில் ஒரு தாளில் இரண்டு பக்கங்கள் இருப்பதுபோலப் பிறப்பும் இறப்பும் ஒன்றைேடு ஒன்று ஒட்டித் தொடர்ந்து இருப்பவை. ஆதலால் ஆசைக்கடலால் பிறவிக்கடல் தோன்ற, அதனல் மரணக் கடலும் விரிக்கிறது.

மரணம் வரும்போது யமன் வந்து கைப்பாசத்தை விசி உயிரைக் கொண்டு போகிருன் என்று சொல்வது மரபு. ஆசை என்னும் வித்தை விதைப்பதல்ை யமனுக்கு வேலை கொடுக்கிறோம், அவன் கைப்பாசத்திற்கு வேலை கொடுக் கிறோம். ஒவ்வொருவரும் ஆசையை விரித்து விரித்து, இந்தப் பிறவியின் இறுதியில் அந்தகளுகிய யமனுடைய பாசவலையிலே படச் சித்தராக இருக்கிருேம்.

ஆனல் அம்பிக்கையின் திருவருளைப் பெற்றவர்களுக்கு இந்த நிலை மாறி விடுகிறது. இந்தப் பிறவியின் இறுதியில் யமனை ஒட்டும் நிலை வரும் என்பது மாத்திரம் , அன்று; நமக்கு யமவாதனை இல்லை என்ற உறுதியும் அதனால் விளையும் இன்பமும் அவர்களுக்கு முன்கூட்டியே உண்டாகி விடு கின்றன. சூரியோதயத்துக்கு முன் அருணுேதயம் போலவும், தாமரை நன்கு மலர்வதற்கு முன் பெரும் போதாவது போலவும் உள்ள ஒரு நிலையை அவர்கள் அடைகிருர்கள், சிறைப்பட்டவனுக்கு விடுதலை உத்தரவு வந்து விட்ட தென்ருல், அப்பொழுதே அவனுக்கு ஒருவகை இன்பம் உண்டாகும்; வெளியில் வந்துவிட்டது போன்ற மகிழ்ச்சியிலே திளைப்பான். கதவைத் திறந்து வெளியில்விடவேண்டிய அந்த ஒன்றுதான் குறை. அவன் சிறையிலுள்ள குற்றவாளி அல்ல. ஆனால் முழு விடுதலை அடைந்தவனும் அல்ல. அவன் உடம்பு இன்னும் சிறையில் இருக்கிறது. இதோ விரைவில் வெளியில் வந்தேவிடுவான் - -