பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 மாலை பூண்ட மலர்

பறிமுதல் செய்வார்கள். முத்திரைப் பெற்ற பண்டங்கள் சங்க அதிகாரிகளின் கைக்குச் செல்வதில்லை. அவற்றை உரியவர்கள் தம் விருப்பம்போல எடுத்துச் செல்லலாம்.

உயிர்க்கூட்டங்கள் ஆற்றவேண்டிய AG (-55) LD6ð) tLJ ஆற்ருமல் இருக்கின்றன. அதனல் யமபடர்களால் பறி முதல் செய்யப்படுகின்றன. அருள் முத்திரை பெற்று விட்டால் யமபடர்கள் விட்டுவிடுவார்கள். அம்பிகை அப்படித் தன் அருள் முத்திரையை இட்டாளாம். அன் பர்கள் தாமே நாடிச் சென்று உரிய கட்டணம் கட்டி அந்த முத்திரையைப் பொறித்துக்கொள்வது வழக்கம். ஆனல். இங்கே அன்பர் தாம் வருந்திச் செல்லாமலே அம்பிகை வலிய வந்து அவர் தலைமேல் தன்னுடைய பாதத்தை வைத்து, 'இந்தக் கமல முத்திரை நீ என் அடியானைதற்கு அடையாளம்’ ’ என்று சொல்லி ஆண்டு கொண்டாளாம். வலிய வந்து தடுத்தாட்கொண்ட பரம கருணையை எண்ணி எண்ணி அன்பர் வியந்தால் அது ஆச்சரியம் அல்லவே!

கின் பாதம் எனும் ೧T6550606 தலைமேல் வலியவைத்து ஆண்டுகொண்ட நேசத்தை என் சொல்லுவேன்!

அம்பிகை தன் பாதமாகிய ஞானமணம் கமழும் செந்தாமரை மலரைத் தலைமேல் வலிய வைத்து ஆண்டு கொண்டாள். அவள் தன் குழந்தையின் தலையில் வலிமையுடன் காலால் மிதிக்கவில்லை. தலையின்மேல் மலரை வைத்தாற்போல் திருவடியை வைத்து ஆண்டு கொண்டாள். முடைநாய்த்தலையில் வாசக்கமலம் பட்ட வுடன் இந்த உடம்பே புனிதமாகிவிட்டது. பிறகு யமனுக்கு இங்கே என்ன வேலை? -

இந்த அற்புத அருளை நேசம் என்று குறிக்கிரு ர் அபிராமிபட்டர். நேசம் என்பது தானே விரும்பி ஏற்படுத்