பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 மாலை பூண்ட மலர்

ஆசையென்னும் கரையற்ற கடலில் துரும்புபோல அகப் பட்டு, அதன் விளைவாக மரணம் வருங்கால்சிறிதும் இரக்கம் இல்லாத யமனுடைய கையிலுள்ள பாசத்தில் அகப்பட்டு மிக்க துன்பம் அடையும்படியான அவல நிலையில் கிடந்த இந்த எளியேனை, நின்னுடைய திருவடியாகிய நறுமணம் வீசும் தாமரை மலரை அடியேன் தலைமீது நீயாக விரும்பி

வலிய வைத்து என்னை ஆண்டு ஆளாக்கிக்கொண்ட பெருங் கருணையை எவ்வாறு விரித்துச் சொல்லுவேன்!

அந்தகன் - யமன். பாசம்-கயிறு. வாசம் - நறுமணம். நேரிழை - நுட்பமான அணிகலன்களை அணிந்து கொண் டவள்; "இழையணி சிறப்பிற் பழையோள்" (திருமுருகாற்றுப்படை); நீல மேனி வாலிழை பாகத்து, ஒருவன்' (ஜங்குறு நூறு) என்பவற்றைக் காண்க.)

அம்பிகை தன்னை அண்டி அன்பு செய்தவர்களுக்கு, யமனுல் வரும் துன்பத்தைப் போக்குபவள் என்பது, 'காலஹந்த்ரி’ என்னும் அவள் திருநாமத்தால் பெறப்படும். அன்றியும் அபிராமி எழுந்தருளியிருக்கும் தலமே கால சங்கார rேத்திரந்தானே? -

இது அபிராமி அந்தாதியில் 32-ஆம் பாடல்.