பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீயே சரணம்

'பயப்படாதே; பணம் இல்லாவிட்டால் நான் தருகிறேன்’ என்று ஒரு செல்வர் ஏழை ஒருவனுக்குக் கூறிப் புகல் அளித்தார். அதனால் ஏழைக்கு மனத்தில் இருந்த கலக்கம் ஒழிந்தது. நித்தியப்படி ஏற்படும் செலவுக்கு அவன் செல்வரை எதிர்பார்க்கவில்லை. ஒருவனிடத்தில் அவ ன் கடன் வாங்கியிருந்தான். அவன் இன்னபோது வந்து கடனைத் திருப்பிக் கேட்பானென்று தெரியாது. அவ ன் வந்து கேட்டால் என்ன செய்வது என்று நடுங்கிக் கொண் டிருந்தான். அப்போதுதான் அந்த ஏழைக்குச் செல்வரின் நினைவு வந்தது. அவரை அணுகிப் பணிந்து தன் குறையைச் சொன்னன். அவர் அவனுக்கு அபயம் அளித் தாா. .*

அதன் பிறகு ஏழைக்கு மனம் சற்றே உறுதி பெற்றது. கடன்காரனுக்கு அஞ்ச வேண்டாம் என்று எண்ணி இருந் தான். ஆனலும் அவனுக்கு அச்சம் முற்றும் நீங்கின பாடு இல்லை. ஒருகால் கடன்காரன் வரும் சமயத்தில் அவரைக் காண முடியாமற் போகுமோ என்ற ஐயம் வந்தது எதற்கும் மறு முறையும் நினைப்பூட்டலாம் என்று அவரிடம் சென் முன். ஐயா, உங்களைத்தான் நம்பியிருக்கிறேன். அந்தக் கடன்காரன் பொல்லாதவன். அவன் வருவது தெரிந்தால், நேரே இங்கே ஓடிவந்து, 'ஐயா காப்பாற்று ங் கள்’ என்று விழுவேன்; நீங்கள் கை கொடுக்க வேண்டும்' என்று முறையிட்டுக் கெர்ண்டான்.

அந்த ஏழையின் நிலையில் இருக்கிருர் அபிராமி பட்டர். சென்ற பாட்டில், அந்தகன் கைப்பாசத்தில் அல்லற்பட