பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 மாலை பூண்ட மலர்

இருந்தேனே நின் பாதமெனும், வாசக் கமலம் தலைமேல் வலியவைத் தாண்டு கொண்ட, நேசத்தை என் சொல்லு வேன்!’ என்று கூறியவர், தமக்கு அம்பிகையின் அருள் எப்படியும் கிடைத்துவிடும் என்பதை உறுதி செய்து கொள் வதற்காக மீட்டும் அன்னையிடம் விண்ணப்பம் செய்து கொள்கிரு.ர். -

யமன் நம்முடைய இறுதி நாள் இன்ன காலத்தில் வரும் என்பதை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக் கிருன். இன்ன நாள் என்று முன்பே விதிக்கப்பட்டிருக் கிறது. இழைத்தநாள் எல்லை' என்று நாலடியார் கூறும். நம்முடைய முன்னை வினைப்பயனை நுகர்வதற்கே பிறவி வருகிறது. அந்த வினை தீர்ந்தால் இந்த உடலம் போய்விடும்; இப்பிறவியில் செய்யும் வினைப்பயனை நுகர வேறு பிறவி எடுக்கிருேம். -

வினைப்போக மேயொரு தேகங்கண் டாய்வினை,

தான் ஒழிந்தால் - - தினைப்போ தளவும்தில் லாதுகண்டாய்”

என்று பட்டினத்தார் கூறுகிரு.ர்.

அவ்வாறு அறுதியிடப்பட்ட நாளில் காலன் வருவான். அந்தக் கணக்கு அவனுக்கு நன்ருகத் தெரியும். ஆகையால் தான் அவனுக்குக் காலன் என்ற பெயரே வந்தது. நாட் பார்த்து உழலும் கூற்று' என்பர். அந்தச் சமயத்தில் தவருமல் அவன் வந்து நிற்பான். அவனை உலகில் யாராலும் தடுக்க முடியாது. காலன் வந்து, 'வா போக லாம்' என்று அழைத்தால் உயிர் நடுநடுங்கும். அத்தகைய சமயத்தில் அவனிடமிருந்து காப்பாற்றும் வலிமை அம்பிகை ஒருத்திக்குத்தான் உண்டு; ஆதலால் மீண்டும் அப்பெருமாட்டியினிடம் விண்ணப்பித்துக் கொள்கிருர், - ع FT سبأسمسلسل.