பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீயே சரணம் 6藍

இழைக்கும் வினைவழியே அடும் காலன்

என நடுங்க - அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய்

காலனைக் கண்டு நடுங்கும்போது அம்பிகையின் நினைவு. வரும். பூச்சாண்டியைக் கண்டு நடுங்கிய குழந்தை அம்மா!' என்று கத்திக்கொண்டு ஓடிவருவதுபோல அம்பிகையிடம் ஒடிச் செல்லலாம் என்று எண்ணுகிருர், அதைச் சொல்கிரு.ர். அந்தப் பாவி வந்துவிட்டால் நான் மிகவும் வருந்துவேன். அப்போது வேறு யாரிடமும் செல்லமாட்டேன்; உன்னிடமே ஓடிவந்து, "தாயே! காப்பாற்ற வேண்டும்’ என்று கதறுவேன்' என்று. விண்ணப்பம் செய்து கொள்கிரு.ர். -

உழைக்கும்பொழுது -ಸrಒTGu

அன்னையே! என்பன் ஓடி வந்தே.

பல பேருக்கு மரணுவஸ்தை உண்டாகும்பொழுது இறைவனுடைய நினைவு வருவதில்லை. சாகும் காலத்தில் சங்கரா சங்கரா என்பது எளிதன்று, அப்பர் சுவாமி களே, ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய், ஒக்க அடைக்கும்போது உணர மாட்டேன்' என்று சொல்லும் போது, மற்றவர்கள் எம்மாத்திரம்? பல காலம் பழகிய பிரபஞ்சத்தின் வாசனைதான் அந்த இறுதிக் காலத்தில் முன் வந்து நிற்கும். அப்போது எந்த ஆசை மீதுார்ந்து நிற்கிறதோ, அதற்கு ஏற்றபடி அடுத்த பிறவி உண்டாகும்.

ஆனல் இறைவனிடம் பக்தி செய்து மெய்யறிவு பெற்றவர்களுக்கு அந்தச் சமயத்திலும் இறைவன் நினைவு மாரு து. மற்ற எல்லாவற்றையும் மறந்து அவனையே சார்பாகப் பற்றிக் கொள்வார்கள். அவர்களுடைய மனம் இறைவ: னிடம் விரைந்து சென்று பற்றிக் கொள்ளும்.