பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீயே சரணம் 63

தைக் கடந்துவிட்டதாக நினைக்கிருேம். அதல்ை அம்மாவை நினைப்பதில்லை. இந்த உடம்பைத் தந்த அன்னை சில காலம் இருந்து மறைபவள். எல்லாக் காலத்தும் எந்த உயிரும் அம்மா என்று அழைக்கும் தகுதி உடையவள் அபிராமி. அவளுக்கு எத்தனையோ வலிமை யும் பண்புகளும் இருந்தாலும், கருணையினலும் உறவி லுைம் அவள் எல்லா உயிர்களுக்கும் தாயாக இருக்கும் பண்பு மிக மிகச் சிறந்தது. அதை நாம் நினைப்பதில்லை. அதனுல்தான் துன்புறுகிருேம். துயரம் வரும்போது வாய் 'அம்மா’ என்று அலறுகிறது. ஆனல் உண்மையான அன்னையை நினைத்து அலறுவதில்லை; மனம் அன்னையை நினைப்பதில்லை. -

குழந்தைப் பருவத்தில் மனம் அன்னையை நினைத்தது; வாய் அம்மா என்று கூவியது. அந்தப் பழக்கத்தால் வாய் மட்டும் அம்மா என்று துன்புறும் போதெல்லாம் விடாமல் சொல்கிறது. காவிலே ஏதாவது குத்தினுல், அம்மா!' என்கிருேம். எதையாவது இழந்துவிட்டால், அம்மா' என்கிருேம். யந்திரம் உணர்ச்சியின்றி ஒலிக்கும் ஒலிபோல இது இருக்கிறதேயன்றி, மனத்தில் அதன் பொருளை நினைத்துக் கூவுவதில்லை.

நாம் அறிவு வந்த குழந்தைகள். ஆதலின் எப்போதும் மாதாவாக இருக்கிற அன்னையை உணர்ந்து, அம்மா என்று அழைக்க வேண்டும். அழைக்கும் பழக்கம் இருக்கிறது; யார் அன்னை என்று உணரும் பழக்கம் இல்லை. மற்றவர் களெல்லாம் உண்மையான அன்னே அல்லர், எம்பிராட்டி ஒருத்தியே சத்தியமான அன்னை என்பதை அறிவுறுத்து வதற்காகவே லலிதாசகசிரநாமம் எடுத்தவுடனே பூரீமாதா, என்று அறிவிக்கிறது. அந்த ஒரு நாமத்தைத் தெரிந்து கொண்டு, உண்ர்ச்சிவசப்பட்டுக் கதறினலே போதும். தொடக்கத்தில்ே சொன்னது போதாதென்று மீண்டும்,