பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 மாலே பூண்ட மலர்

ஆப்ரஹ்ம கீட ஜனனீ (285) என்றும், அம்பிகா (295) என்றும், மாதா (457) என்றும், ஜனனி (823) என்றும். அம்பா (985) என்றும் அந்தத் திவ்ய நூல் நினைவுறுத்து கிறது. - -

இறுதிக் காலத்தில் அப்பிராட்டியிடம் அன்னையே என்பன் ஓடிவந்தே, என்று புகுவதற்கு எவ்வளவு தகுதி வேண்டும்! அந்தத் தகுதியுடையவர் அபிராமிபட்டர். இழைக்கும் வினை வழியே அடும் காலன்

என நடுங்க - அழைக்கும் பொழுது, வந்த அஞ்சல் என்பாய்:

உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே - என்பன் ஓடிவந்தே. காலன் வந்து நிற்கும்போது நாம் ஒடிச் சென்ருல் போதாது. நம்மால் அம்பிகையை அணுக இயலாது. முழுத் தூரமும் போவதற்கு நமக்கு ஆற்றல், இல்லை. அவளும் நம்மை நோக்கி வரவேண்டும். நாம் ஒடிச் செல் வோம். அவள் மெல்ல நடந்து வந்தாலே போதும்.

அன்னையே என்று ஓடிவருவேன்' என்ருர் பட்டர். அன்னை எத்தகையவள்! நம்முடைய தந்தைக்குப் பிரிய மானவள். அதை நினைக்கிரு.ர். அம்பிகையின் உருவப் பேரழகில் சொக்கி நிற்கிறவர், எம்பெருமாளுகிய பரமசிவனர். நம் அத்தராகிய அவருடைய சித்தத்தைக் குழையச் செய்கிறது அம்மையின் தனபாரம். இளமை வாடாத நிலையில் அமைந்த அது கலவைச் சந்தனத்தைப் பூசிக்கொண்டு விளங்குகிறது; எம்பெருமானுடைய திருவுள்ளம் வேறு எதையும் நாடாதபடி முழுவதையும் குழையச் செய்கின்றது. - -

- அத்தர் சித்தம் எல்லாம்

குழைக்கும் களபக் குவிமுலை.