பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 மாலை பூண்ட மலர்

காலனுக்குப் பயத்தையும் காலகாலனுக்கு நயத்தையும் உண்டாக்கும் அபிராமியம்மையின் பெருமையை இந்தப் பாட்டில் பாடுகிருர் அபிராமிபட்டர்.

இழைக்கும் வினைவழி யேஅடும் காலன் எனேநடுங்க அழைக்கும் பொழுதுவந் தஞ்சல்என் பாய்; அத்தர் சித்தம் எல்லாம் குழைக்கும் களபக் குவிமுலே

யாமளைக் கோமளமே! உழைக்கும் பொழுதுன்னை யேஅன்னை

யே.என்பன், ஓடி வந்தே.

(இறைவருடைய திருவுள்ளம் முழுதும் உருகும்படி செய்யும், கலவைச் சந்தனம் பூசிய குவிந்த தனபாரங்களை உடைய யாமளேயாகிய மெல்லியலே, எல்லாவற்றையும் வரையறுக்கும் விதியின்படி கொல்ல வரும் காலன் என்னை நடுங்கச்செய்து அழைக்கும்போது, நீ எழுந்தருளி, நீ பயப்படாதே!' என்று அருள வேண்டும்; நான் வருந்தும் போது வேறு யாரையும் நாடாமல் உன்னையே நாடி ஒடி வந்து, 'அன்னையே! சரணம்' என்று புகலடைவேன்.

இழைக்கும்-விதிக்கும்; வினை-விதி. நான் செய்த முன்னை வினையின்படி என் இறுதிக் காலத்தில் காலன் அழைக்கும்பொழுது என்றும் பொருள் கொள்ளலாம். அடும்-கொல்லும், குழைக்கும்-திண்மை நீங்கி உருகச் செய்யும். களபம்-கலவைச் சந்தனம். உழைத்தல்வருந்துதல்.1 -

இது அபிராமி அந்தாதியில் உள்ள 33-ஆவது பாடல்.