பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

தமிழில் உள்ள பாராயண நூல்களுள் ஒன்று அபிராமி. அந்தாதி. இதைப் பாடிய அபிராமி பட்டர் பூ வித்யா உபாசகர். ஆகையால் அம்பிகையைப் பற்றி மற்றவர்கள் பாடிய துதி நூல்களில் காணப் பெருத சில சிறப்பியல்புகள் இந்த நூலில் உள்ளன. அம்பிகையைப் பரதேவதையாகக் கொண்டு அவளே எல்லாத் தெய்வங்களுக்கும். மேலானவள் என்று போற்றும் நெறியே பூரீ வித்யை. அம்பிகையின் திருவுருவம் செந்நிறத்தது என்றும், அவள் பூரீ சக்ரத்தில் பிந்து ஸ்தானத்தில் இருப்பவள் என்றும், அவள் பஞ்சப் பிரேத பர்யங்கத்தில் வீற்றிருப்பவள் என்றும், அவள் ஒவ்வோர் ஆதாரத்திலும் வெவ்வேறு வடிவத்தில் எழுந் தருளியிருக்கிருள் என்றும் கூறும் கருத்துக்களும் இவை போன்ற பிறவும் பூர் வித்யா உபாசகர்களுக்குப் பழக்க மானவை. அபிராமி பட்டர் இத்தகைய கருத்துக்களை இந்த அந்தாதியில் படுத்துச் சொல்கிருர்.

தமிழில் பூர் வித்யா சம்பந்தமான நூல்கள் மிகக் குறைவு; இல்லையென்றே சொல்லி விடலாம். மொழி பெயர்ப்பு நூல்களைத் தவிர அத்துறையில் வந்த முதல் நூல் ஏதும் இல்லை. செளந்தர்யலகரி தமிழ்ச் செய்யுள் உருவத் தில் இருந்தாலும் அதுவும் மொழி பெயர்ப்பே. ஆதலின் அபிராமி அந்தாதியைத் தமிழ் மட்டும் அறிந்தவர்கள் படித்து ஓரளவு பூரீ வித்யையின் தத்துவங்களை உணர்ந்து கொள்ளலாம், -

அபிராமி அந்தாதியின் முதல் இருபத்தைந்து பாடல் களுக்குரிய விளக்கக் கட்டுரைகளைத் தொகுத்து, எழில் உதயம்' என்ற பெயரில் முன்பு வெளியிட்டேன். அதைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாலை_பூண்ட_மலர்.pdf/7&oldid=615472" இலிருந்து மீள்விக்கப்பட்டது