பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 மாலே பூண்ட மலர்

சூரியனிலும் சந்திரனிலும் போய்த் தங்குகிருள் என்று அந்த இடங்களைக் குறிக்கிருர். அந்தப் பாடலை இப் போது பார்க்கலாம்.

அவளுடைய அடியார்கள் வேறு யாரையும் நாடிச் செல்வதில்லை. எங்கள் மாதாவாகிய பராசக்திக்கு மிஞ்சியவர் யாரும் இல்லை. அந்தப் பிராட்டியே எங்களுக்கு. யாவும் தருபவள்; எந்த இடையூற்றினின்றும் எம்மைக் காப்பவள்’ என்று உறுதியாக நம்பி அவளைச் சரணம் அடைவார்கள். அவர்களுக்கு அம்பிகை தேவலோகத்தை அன்போடு வழங்குகிருள். 'பாவம் இவர்கள் எங்கெங்கோ உழன்ருர்கள். உலகத்தில் வறுமையிலுைம் நோயினுலும் பிற துன்பங்களினலும் வருந்தி அமைதியில்லாமல் தங்க இடமும் அநுபவிக்கப் பொருளும் இல்லாமல் திண்டாடி. ஞர்கள். இவர்கள் இந்த விசாலமான இடத்தில் பரம போக்யமான வாழ்வைப் பெற்று இருக்கட்டும்' என்று. பரிவோடு தருகிருள். -

வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம் தங்தே பரிவொடு. -

யார் யாரையோ தேடிப் போகாமல் தாய் உள்ள இடத்தை அறிந்து வந்துசரணம் புகுகிறவர்கள் அடியார்கள். தாயினிடம் ஓடிவந்து காலக் கட்டிக்கொள்ளும் குழந்தையை அன்னை உடனே எடுத்துக் கொஞ்சுவாள். அடியார்கள் அன்னையின் அடியைப் பற்றிக்கொண்டு. சரண் அடை கிருர்கள். அவர்களுடைய பழைய நிலையை யும் இப்போதுள்ள ஆர்வத்தையும் கண்டு அன்னை பரிவோடு நோக்குகிருள். இவர்கள் சில காலம் இந்தப் போகத்தை நுகரட்டும் என்று அமரல்ோக வாழ்வை அருளுகிருள். பக்தர்களுக்கு இனிய போக வாழ்வைத் தருகிறவள் அன்னை என்பதை, பக்த ஸெளபாக்ய தாயினி' என்ற அவள் திருநாமம் சொல்லும். சுவர்க்கம்