பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 மாலை பூண்ட மலர்

யெல்லாம் சுழலவிட்ட மகாசக்தி ஒன்று இருக்கிறது. அந்தச் சக்திக்குப் பெயரே பராசக்தி, அந்த அன்னையின் அருளால் சூரியசந்திரர்கள் சுழலுகிருர்கள்; வானவெளியில் ஆதாரமின்றி இருக்கிருர்கள்; ஒளி தருகிருர்கள். அம்மை அவற்றில் மறைந்து நின்று நடத்துகிருள். பானுமண்டல மத்யஸ்தா (275) என்றும், சந்த்ரமண்டல மத்யகா (240) என்றும் அம்பிகையை வழங்குவதல்ை இந்தக் கருத்தை உணரலாம். - -

'இரவுபகல், சூழும் சுடர்க்கு நடுவே

கிடந்து சுடர்கின்றதே' (47) என்று இவ்வாசிரியரே பின்னல் ஒரு பாடலில் சொல்கிருர் .

பொற் செந்தேன் மலரும், அலர் கதிர்

ஞாயிறும், திங்களுமே. வீட்டைக் கட்டி, அது நன்ருக விளங்கும்படி பாது காத்து, உரிய காலத்தில் அதை இடித்துப் புதுக்கி அதில் நல்ல விளக்குகளை ஏற்றிவைத்து நன்மை புரிகிற ஒருத்தியைப் போல, அம்பிகை இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்துக் காத்து அழிக்கக் காரணமாக இருந்து, வெவ்வேறு கோலங் களில் வெவ்வேறு இடத்தில் அமர்ந்து பல காரியங்கள் நடக்கச் செய்து, இரண்டு சுடர்களையும் ஒளி பெற்றுப் பிரகாசிக்கச் செய்கிருள். இதனைப் பின்வரும் பாட்டில் அழகாகச் சொல்கிருர் அபிராமிபட்டர்.

வந்தே சரணம் புகும்.அடி

யாருக்கு வான் உலகம் தந்தே பரிவொடு தான்போய்

இருக்கும் சதுர்முகம் பைங்தேன் அலங்கற் பருமணி

ஆகமும் பாகமும்பொற் செந்தேன் மலரும் அலர்கதிர்

ஞாயிறும் திங்களுமே.