பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறு இடங்கள் - 73

(அபிராமியன்னை தன்னிடம் வந்து புகலடையும் அடியவர்களுக்குச் சொர்க்கலோக பதவியை அன்போடு தந்து, நான் பிரமதேவனுடைய நான்கு முகங்களிலும். பசிய தேன் ஒழுகும் துழாய்மாலையும் பருத்த கவுஸ்துப மணியும் அணிந்த திருமாலின் திருமார்பிலும், சிவபிரா னுடைய வாம்பாகத்திலும், செந்தேன் சொரியும் பொலிவு பெற்ற தாமரை மலரிலும், பரவிய கிரணங்களையுடைய கதிரவனிடத்திலும், ச ந் தி ர னி ட த் தி லு ம் போய் வீற்றிருப்பாள். -

வானுலகம் - தேவலோக பதவி. பரிவு - அன்பு, இரக்கம். சதுர்முகம் என்ற எண்ணிக்கை பிரமாவின் முகங் களைக் குறித்தது. பைந்தேன்: இங்கே பசுமை, புதுமையைக் குறித்தது. பொன்-பொலிவு1.

இது அபிராமி அந்தாதியில் 34-ஆம் பாடல்.