பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறலரும் தவம் 75,

திருக்கோலத்தோடு எழுந்தருளியிருக்கிருள். உலகமே திருமேனியாக உடைய எம்பிராட்டி உலகம் மூடும் பெரும் பாதம் உடையவள். ஆயினும் தன்னுடைய அடியார்களுக் காக இரங்கி அவர்களுடைய தலையில் அமையும்படி சிற்றடிப் பெண்ணுக வந்து அவர்கள் அடியார் என்பதை உறுதிப் படுத்துகிருள். அம்பிகையின் அடியை முடியில் உடையவர் களாதலின் அடியார் ஆயினர். . -

இந்தத் தவம் பெரிது என்பதற்கு என்ன ஆதாரம்?

எத்தனையோ தேவர்கள் அந்தத் திருவடியைத் தம்முடைய தலையிலே சூடிக்கொள்ள வேண்டுமென்று எண்ணிஞர்கள்;

முயன்ருர்கள். ஆனலும் அவர்களுக்குத் தவம் போதவில்லை.

அவர்கள் செய்யும் தவத்துக்கு அவ்வளவு பெரிய பரிசு கிடைக்க நியாயம் இல்லை. தேவர்கள் தம்மை நோக்கித்

தவம் செய்கிறவர்களுக்குப் பல வரம் கொடுத்தவர்கள். - அவ்வளவு பெரியவர்கள் இறைவியின் திருவடியைத் தம் தலைமேலே வைத்துக்கொள்ள எண்ணி எப்படி எப்படியோ முயல்கிருர்கள். அவர்கள் செய்யும் தவம் அதற்குப் போதவில்லை. அவர்களுக்கு எங்கே அதற்கு ஏற்ற தவம் கிடைக்கப் போகிறது?’ என்றே தோன்றுகிறது.

எண் இறந்த விண்ளுேர் தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ!

தேவர்கட்கும் கிடைக்காத தவம் அடியவர்களுக்குக் கிடைத்தது. அந்தத் தவத்தின் பயனாக இந்தப் பெரும் பேறு கிடைத்தது. அம்பிகை தன் சிறிய திருவடியை அவர்களு டைய தலைமேல் வைத்தாள். -

பக்தர்கள் அகந்தையை விட்டு எப்போதும் பணிவுடன் இருப்பார்கள். தலையில் அம்பிகையின் திருவடி இருப்பதால் நிமிரமாட்டார்கள்; பணிவாகவே இருப்பார்கள். தேவர் களுக்கும் பணிவுக்கும் நெடுந்துரரம். அதனல்தான் அவர்கள்