பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“78 மாலை பூண்ட மலர்

மகாதேவனுடைய திருமுடியிலே வைக்கும் பாதம என்று, அறையில் நடந்ததை அம்பலமாக்குவது முறையா காது. ஆனலும் அந்த அடியின் பெருமையைச் சொல்ல வேண்டும். அதனல் குறிப்பாக இது புலப்படும்படி, அம்பிகையின் திருவடி பிறைச்சந்திரனுடைய மணம் வீசுகிறது என்கிருர் அபிராமிபட்டர். -

திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி

சென்னி வைக்க எங்கட்கு ஒரு தவம் எய்தியவா!

என்று சொல்கிரு.ர். அந்தரங்கமான நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் இறைவனுடைய தலையின்மேல் படும் திருவடி, வேறு எந்தத் தேவரும் தம் தலைமேல் வைத்துக்கொள்ளும் பாக்கியம் இல்லாத திருவடி, அதைத் தாயே நீ எங்கள் தலையின்மேல் வைப்பதற்கு நாங்கள் செய்த தவந்தான் என்னே! அந்தத் தவம் வேறு யாருக்கும் கிடைக்காதே!’ என்று ஈடுபடுகிருர் அபிராமிபட்டர்.

அருணகிரிநாதர் அம்பிகையின் திருவடியில் பிறைச் சந்திரனுடைய மணம் வீசும் என்பதைச் சித்து வகுப்பில் பாடுகிருர்,

“தருண சந்த்ர ரேகை விரவு மணநாறு பாதார விந்த

விதரண விநோத மாதா...'

குமரகுருபர முனிவர் இந்தச் செய்தியை, - கூன் பிறைக் கோடுழுத பொலன்சீறடி' என்று மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழிலும், 'பிறைநாறும் சீறடியைப் பாடுவனே." என்று மீனாட்சியம்மை குறத்திலும்,

பிள்ளைப் பிறைநாறும் சீறடியெம் பேதாய்' :