பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறலரும் தவம் 79

என்று சிவகாமியம்மை இரட்டை மணிமாலையிலும் அமைக் கிரு.ர். -

'இந்தத் தவம் பிறருக்கு எய்துமோ? என்று அம்பிகை யையே கேட்கிருர், வேறு ஒருவருக்கும் கிடைத்த துண்டு' என்று அம்பிகை சொல்ல முந்தினுலும் முந்தலாம். அந்த இரகசியம் தமக்குத் தெரியும் என்பதைக் குறிப்பாகச் சொல்வார்போல,

திங்கட் பகவின் மணம் நறும் சீறடி

என்று சொன்னர். -

அம்பிகையை விளித்து இதைச் சொல்கிரு.ர்.

வெங்கட் பணி அணமேல் துயில்கூரும்

விழுப்பொருளே!

என்று பாட்டை முடிக்கிரு.ர். .

அம்பிகை வெவ்விய கண்ணை உடைய ஆதிசேஷகிைய படுக்கையின்மேல் துயில் கூர்கிருளாம். ஆதிசேஷன்மேல் துயிலுபவர் திருமால். அம்பிகையே திருமாலாக இருந்து உலகத்தைப் புரக்கிருள். கோவிந்தரூபிணி. நாராயனி, முகுந்தா, வைஷ்ணவி, விஷ்ணு ரூபிணி என்ற திருநாமங் கள் அவளுக்கு வழங்குவதன் காரணமே அதுதான். அம்பிகையின் உருவங்களில் ஆண் உருவமாக உள்ளது திருமால் வடிவம். வைஷ்ணவி சக்தியாகத் திருமாலுக்குரிய படைகளைத் தரித்துப் பாம்பனையில் துயில் கொள்வதும் உண்டு. -

'பொங்கமளிப் புணரித்துயில் வல்லி' -

வலையவா ளராமீது துயில்விடாத தான்’ (13, 111)

என்று ஒட்டக்கூத்தர் தக்கயாகப் பரணியில் பாடுகிரு.ர்.

இங்கே அந்த நிலையைச் சொல்கிருர் ஆசிரியர். அவள் எல்லாப் பொருளுக்கும் மேலான பொருள்; பரம்பொருள்;