பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 - மாலை Hi L- மலர்

விழுப்பொருள். பரப்பிரம்மமே அவள்தான். அதையும் நினைக்கிரு.ர். -

அந்த விழுப்பொருளாகிய அபிராமியன்னை அடிய வர் களிடம் பேரருள் கூர்ந்து அடியார்கள் என்பதை உறுதிப் படுத்துவதுபோல அவர்கள் தலையில் தன் திருவடியை வைத்து நலம் செய்கிருள். இந்தப் பேற்றைப் பெற்ற பட்டர் வியந்து பாடுகிருர், .

திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி

சென்னி வைக்க . எங்கட்கு ஒருதவம் எய்திய வா!எண்

இறந்தவிண்ணுேர் தங்கட்கும் இந்தத் தவம் எய்து மோ? தரங்

கக்கடலுள் : வெங்கட் பணி அணை மேல்துயில் கூரும்

விழுப்பொருளே (அலே வீசும் பாற்கடலில் வெவ்விய கண்ணையுடைய ஆதிசேஷகிைய பாம்புப்பாயலின்மீது துயிலும் பரம் பொருளே, சிவபிரானுடைய திருமுடியில் உள்ள பிறைச் சந்திரனது மணம் வீசும் நின்னுடைய சிறிய அடியை அடியேங்களுடைய தலையிலே நீ வைத்தருள. எங்களுக்கு ஒப்பற்ற தவம் கிடைத்தவாறு என்ன வியப்பு: கணக்கில் லாத பல தேவர்களுக்கும் இத்தகைய சிறந்த தவம் கிடைக்குமோ? கிடைக்காதே! . -

歌 திங்கட் பகவு - சந்திரனது பிளவு: பிறை. எங்கட்கு எனறது அடியார்கள் எல்லாரையும் எண்ணிச் சொன்னது. ஒரு - ஒப்பற்ற, எய்தியவா - எய்தியவாறு என்ன வியப்பு. தரங்கம் அல. கண்ணினுல் தீயைக் கொப்புளிப்பதளுல் லுெங்கண் என்ருர். பணி - பாம்பு, இங்கே ஆதிசேஷன். அணை - படுக்கை. - r

இது அபிராமி அந்தாதியில் 35-ஆம் பாடல்.