பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 மாலை பூண்ட மலர்

அவளோடு இந்த ஆத்மா ஒரு மின்னற் கீற்றுப்போலே கலந்து ஒன்ருகிவிடுகிறது. வெள்ளத்தில் மழைத்துளி வீழ்ந்து கரைவதுபோல, பெருங்கடலில் அலையெழுந்து அடங்குவதுபோலே, இந்த இரண்டற்ற நிலை உண்டாகி விடுகிறது. இந்த அதிசய நிலையிலிருந்து இறங்கி வந்து பேசுகிருர் அபிராமிபட்டர். சொல்லுவதற்குரிய நிலைக்கு அவர் இறங்கினர்; ஆனால் இந்த அநுபவம் சொல்லும் அளவுக்கு இறங்கி வரவில்லையே!

அம்புயத்தை ஆசனமாக உடைய அம்பிகையை நோக்கி உருகுகிருர் பட்டர். அவள் ஆருதாரக் கமலங் களில் இருந்து வழிகாட்டுகிறவள்; அவற்றிற்குமேலே பிரமரந்திரத்தில் ஆயிர இதழ்க் கமலத்திலே ஜோதி வடி வாக வீற்றிருக்கிறவள். -

உலக நிகழ்ச்சிகள் யாவும் அவள் விளையாட்டு. அவள் குழந்தையைக் கிள்ளிவிட்டு அழச் செய்கிருள். அழுத: குழந்தைக்குத் தாலாட்டுப் பாடித் துரங்க வைக்கிருன். உயிர்களுக்குப் போகம் தந்து மயக்கிப் பின்பு தெளிவும் வழங்கி ஆனந்தாதுபவத்தை உண்டாக்குகிருள். அம்புயா தனத்து அம்பிகையாகிய அபிராமி செய்யும் இந்த அருள் விளையாடலைப் பாடி இன்புறுகிருர், அபிராமிபட்டர்.

பொருளே, பொருள்முடிக் கும்போக

மே, அரும் போகம் செய்யும் மருளே, மருளில் வரும்தெரு

ளே,என் மனத்துவஞ்சத்து இருள் ஏதும் இன்றி ஒளிவெளி

ஆகி இருக்கும் உன்றன் அருள்ஏது? அறிகின்றிலேன், அம்பு

யாதனத்து அம்பிகையே!