பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னை அணியும் பொருள்கள்

பொருளே என்றும், போகமே என்றும் நுட்பமாக அம்பிகையை விளித்துப் போற்றிய அன்பர். 'அம்புயா தனத்து அம்பிகையே' என்று முன் பாட்டை முடித்தார். உடனே அப்பெருமாட்டியின் திருவுருவம் அகக்கண்முன் வந்து நின்றது. அந்தத் திருமேனியின் பேரழகிலே மனத்தை லயிக்கவிட்டுத் தியானம் செய்தார். அவளுடைய அங்கங் களுக்கு அணியாகப் புகுந்து அழகு பெறும் பொருள்களே. உற்றுக் கவனித்தார்; பாடத்தொடங்குகிரு.ர்.

அன்னையின் திருக் கரங்களில் உள்ள கரும்பு வில்லும், மலரம்புகளும் நினைவுக்கு வருகின்றன. அவை இப்போது இனிய கரும்பாக, மணக்கும் நறுமலராகக் காட்சி தருகின்றன. அவற்றை அலங்காரமாக அம்பிகை அணிந் திருக்கிருள். மனத்தையே கரும்பு வில்லாகவும் பஞ்ச தன்மாத்திரைகளையே ஐந்து மலரம்புகளாகவும் அம்மை ஏந்தியிருப்பதாக லலிதா சகசிரநாமம் கூறுகிறது. இவற்றை, மேலே உள்ள இரு கரங்களில் அணிந்திருக்கிருள். அங்குச பாசங்கள் எப்போதுமே ஆயுதமாக இருப்பவை. ஆனல் கரும்பும் பூவும் கையில் இருக்கும் போது அழகாக இருக் கின்றன; போர் செய்யப் புகும்போது வில்லும் அம்புமாகத் தொழிற்படுகின்றன. இப்போது அம்மை தயையே உருவாகக் காட்சி அளிக்கின்ருள். ஆதலின் கரும்பும் மலரும் கையில் அணிந்துள்ள அழகுப் பொருள்களாகத் திகழ்கின்றன. -

கைக்கே அணிவது கன்னலும் பூவும்.

திருக்கரங்களில் உள்ளவற்றைக் கண்டு பிறகு

அம்மையின் திருமேனியைக் காண்கிருர். மென்மையும்