பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னை அணியும் பொருள்கள் 89

செம்மையும் உடைய திருமேனி அது. இதற்கு உவமான மாக எதைச் சொல்வது? செங்கமலத்தைச் சொல்லலாம் என்று தோன்றுகிறது. செக்கச் சிவந்த திருமேனியை யுடைய சிவபிரான் மெய்க்கோலத்துக்குத் தாமரையை உவமை கூறினர் மாணிக்க வாசகர். -

"செந்தாமரைக் காடு அனைய மேனித் தனிச்சுடரே' என்று பாடினர். அபிராமிடட்டருக்கு, அம்பிகையின் செய்ய திருமேனிக்கு அந்தக் கமலமே உவமையாகத் தோன்றுகிறது.

கமலம் அன்ன மெய்.

அந்தத் திருமேனியிலுள்ள திருமார்பில் வெள்ளை வெளேரென்ற முத்துமாலை ஒளிர்கிறது. திருத்தன பாரமும் ஆரமும்' என்று ஒன்பதாவது பாட்டில் கூறி யிருப்பதைப் பார்த்தோம். கமலம் போன்ற மெய்யில் வெண் முத்துமாலையை அணிந்திருக்கிருள் அன்னே. லலிதா சசுசிரநாமத்தில் 32-ஆவது திருநாமம், ரத்ன க்ரைவேய சிந்தர்கலோல முக்தா பலான்விதா' என்பது; அன்னை திருமார்பில் அசையும் முத்துவடம் ஒளிர்வதை அது குறிக்கிறது. o: -

- கமலம் அன்ன, மெய்க்கே அணிவது

- வெண்முத்து மாலை.

கரும்பும் மலரும், முத்து மாலையும், "ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும்' என்று 9-ஆவது பாட்டிலும் ஒருங்கே கூறப்பட்டுள்ளன. - -

கையிலுள்ள கரும்பையும் மலரையும் கண்டு, மெய்யி லுள்ள வெண்முத்துமாலையையும் கண்டு பின்னும் கீழே கண்ணை ஒட்டும்போது, அன்னையின் இடையிலுள்ள பல மணிமாலைகளாலாகிய மேகலை தெரிகிறது. அரவின் படம்