பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90. மாலை பூண்ட மலர்

போன்ற இரகசிய ஸ்தானத்தை மறைத்துக் கொண்டு அந்த மேகலையும், அதன்மேல் பட்டுடையும் ஒளிர்கின்றன.

செல்வ வளம் உள்ள மகளிர் தம் இடையிலே பல வடங்களையுடைய மேகலைகளை அணிந்திருப்பார்கள். பழங் காலத்துச் சிற்ப உருவங்களில் அவற்றைக் காணலாம். எட்டு வடங்களையுடைய மேகலைக்குக் காஞ்சி என்று பெயர் ஏழு வடங்களை உடையது மேகலை, பதினறு வடங்களை உடையது கலாபம்: பதினெட்டு வடங்களை யுடையது பருமம்: முப்பத்திரண்டு வடங்களாலானது. விரிசிகை.

எண்கோவை காஞ்சி, எழுகோவை மேகலை, பண்கொள் கலாபம் பதினறு,-கண்கொள் பருமல் பதினெட்டு, முப்பத் திரண்டு விரிசிகை என்றுண்ரற் பாற்று'

என்பது ஒரு பழம் பாடல், அம்பிகை அளவிலே பெரியதும். பல கோவைகளையுடையதுமான விரிசிகையை அணிந்திருக். கிருள். ரத்ன கிங்கிணி மேகலா என்பது லலிதா சகசிரநாமம் (312).

அம்பிகை தன் இடையில் செம்பட்டைத் தரித் திருக்கிருள்; அருளுருண கெளஸாம்ப வஸ்த்ர பாஸ்வத் கடிதடி என்பது அன்னை திருநாமங்களில் ஒன்று (37) அவள் கடிதடத்தின்மேல் செம்பட்டு ஒளிர்கிறதாம்.

- விட அரவின் பைக்கே அணிவது பன்மணிக் கோவையும்

- பட்டும். - அம்பிகை செம்பட்டு அணிந்திருப்பதை இந்த நூலில் பின்னும், 'ஒல்குசெம் பட்டுடையாளை' (84) என்று: சொல்வார். - - . . .