பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னை அணியும் பொருள்கள் 91.

'சாத்துவன கோசிகமோ (தக்கயாகப்பரணி, 117) என்பது ஒட்டக்கூத்தர் பாடல். -

  • த்ரிபுரை செம்பட்டுக் கட்டு நுசுப்பிற் றிரு'

என்பது திருப்புகழ். .

இந்த அலங்காரங்களை உடைய்வள் யார்? அபிராமி அம்மை. அவள் சிவபெருமானுடைய வாம பாகத்தில் இருந்து விளங்குகிருள். இதைச் சொல்லும்போது சிவபிரானை அடையாளங் காட்ட வருகிருர் அசிரியர். அம்மையின் பட்டுடையைச் சொல்வி முடித்தவுடன் ஐயனுடைய ஆடையே நினைவுக்கு வருகிறது. அவன் எட்டுத் திக்கையுமே ஆடையாக அணிந்திருக்கிருன் என்று. சொல்கிருர். திகம்பரன் என்பது அவன் திருநாமம். அவனுடைய வாம பாகத்தைச் சேர்ந்திருப்பவள் பட்டுடை அணிந்த அபிராமி. -

- எட்டுத் திக்கே அணியும் திருஉடையான் இடம் சேர்பவளே.

கையும் மெய்யும் இடையும் தரிசித்துப் பின் அர்த்த நாரீசுவரத் திருக்கோலத்தையும் தியானித்துப் பாட்டை முடிக்கிருர் பட்டர்.

கைக்கே அணிவது கன்னலும் பூவும்;

கமலம்.அன்ன - - மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை;

விட அரவின் - - பைக்கே அணிவது பன்மணிக் கோவையும்

பட்டும்; எட்டுத் திக்கே அணியும் திருஉடை யானிடம்

சேர்பவளே.