பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபெருமான் பெற்ற தோல்வி

சிவபெருமான் போரிலே தோற்றுப்போளுன் , தன் னுடைய வீரப்பிரதாபத்தால் அட்ட வீரட்டம் என்ற எட்டுத் தலங்களே உலகம் போற்றக் கொண்ட மகா வீரளுகிய சிவபெருமான் தன்னேடு பொருதவருக்கு முன் நிற்கமாட்டாமல் துவண்டு குழைந்து தோல்வியுற்ருன். இந்தத் தோல்வியினல் அவன் துன்பம் அடையவில்லை; அவமானமும் அடையவில்லை. இதனுல் உலகம் அவனே இழித்துப் பேசவில்லை. பக்தர்களும் இதைக் குறையாக எண்ணவில்லை; இதை ஒரு புகழாகவே கொண்டார்கள்.

இந்தத் தோல்வி அவனுக்குப் போர்க்களத்தில் உண்டாகவில்லை. பகைவர்களை எதிர்க்கும்போது உண்டாக வில்லை; சோர்வுற்றபோது உண்டாகவில்லை. அவனே விரும்பி இந்தத் தோல்வியை ஏற்றுக்கொண்டான். அதனால் அவனுக்கு ஆனந்தம் உண்டாயிற்று. இன்னும் அத்தகைய தோல்வியை அடைய அண்ணல் சித்தமாக இருக்கிருன். - - -

அப்படி அவனைத் தோல்வியுறச் செய்தவர் யார்? அவனுடைய அந்தரங்கம் முழுவதும் உளவறிந்த ஒருவரே அவனைப் பொருது துவளச்செய்தார். அவனுடன் எப்போதும் பிரியாமல் உறவுகொண்ட அவர் இந்தத் தோல்விக்கு ஏதுவாக இருக்கிரு.ர். - r

எம்பெருமாட்டி, மகாமாதா, அபிராமிதான் அவனுக்கு. அந்தத் தோல்வியை விளைவித்தாள். புறத்திலே நாலுபேர் காணும் இடத்தில் நிகழும் போரிலன்றி அகத்திலே வீட்டுக்குள்ளே நிகழும் போரில் அவன் துவண்டு அடிம்ை.