பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபெருமான் பெற்ற தோல்வி 35

னிடையே தோன்றிய புன்முறுவலே, தண்ணிய புன்ன கையே, அப்படிச் செய்கிறது. இனிவேறு ஒன்று வேண்டிய அவசியமே இல்லை, புன்னகையாகிய நிலவு வலைபோலப் பரந்து சங்கரனக் கொள்ளைகொண்டு விடுகிறது. இது வரையில் வேறு ஒன்றும் செய்ய முயலாவிட்டாலும், செய்ய வேண்டிய செயலிலே எண்ணம் மட்டும் இருந்தது. இந்தப் புன்முறுவல் அதையும் போக்கிவிட்டது. அவன் அடிமையாகி விட்டான். இப்போது அவன் செயலிழந்து, உரையிழந்து, எண்ணம் இழந்து நிறகிருன்.

அடுத்தபடி என்ன நடக்கிறது? அவன் நிலைகுலைந்து மெழுகு போலக் குழைந்து சமைந்து போகிருன். அம்பிகை யின் தனபாரங்கள் அவனே அவ்வாறு பொருது துவளும்படி செய்து விடுகின்றன. முன்னணியில் சில வீரர்களை விட்டு எதிரியின் படை வலிமையைக் குறைத்துச் சமயம் பார்த்துப் பின் நின்ற படைத்தலைவர் பகைவரைச் சாய்ப்பது போல, தமக்குத் துணையாகப் பவளக் கொடிபோலப் பழுத்த செவ்வாயையும் பணிமுறுவல் அமைந்த தவளத்திரு நகை யையும் கொண்டு சென்று சிவபிரான் மனத்திண்மையை மாற்றிப் பிறகு தாம் முன்னின்று அவனைத் துவளும்படி செய்து விடுகின்றன, அன்னையின் தனங்கள், -

அவை முன்பே தாம் இருந்த இடத்திலும் தம்முடைய ஆற்றலைக் காட்டிக்கொண்டிருந்தன. தம்முடைய பார்த் தில்ை அம்பிகையின் இடையையே தளரச்செய்தன. தினவு தாங்காமல் உள்ளூரிலே குறும்பு செய்த படை வீரர்களுக்கு ஒரு போக்குக் காட்டினது போலே ஆயிற்று, இந்தக் காரியம். உடுக்கையைப் போன்று முன்பே மெலிந்திருக்கும் திருவிடையைச் சாய்க்கும் துணை நகில்கள், வாயையும் நகையையும் துணையாகக் கொண்டு இப்போது சங்கரனைத் துவளப் பொருது வென்றன.