பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 - மாலை பூண்ட மலர்

பவளக் கொடியிற் பழுத்த செவ்வாயும்,

பனிமுறுவல் - தவளத் திருக்கையும் துணையா எங்கள் சங்கரனைத் - துவளப் பொருது துடி.இடை சாய்க்கும் . துணைமுலையாள்.

அம்பிகையின் வாயிதழ் பவளம்போல இருக்கிறதாம்; 'நவவித்ரும பிம்ப ரீந்யக்காரி தசனத் சதா (24) என்பது லலிதா சகசிரநாமம். அந்தத் திருநாமத்துக்கு, புதிய பவளம், கோவைப்பழம் ஆகியவற்றின் ஒளியை மழுங்கச் செய்கின்ற இதழ்களை உடையவள்" என்பது பொருள். பணிமுறுவலே யுடைய தவளத் திருநகை யென்றது, அன்னே யின் பல் வரிசைகள்ை. அவை எப்போதும் குளிர்ச்சியான புன்னகையைப் பூ த் து க் கொண் டு விளங்குகின்றன. பவளமும் முத்தும் வரிசை வரிசையாக வைத்தாற்போல் மேலே பவளம போன்ற இதழ், அதன்கீழ் முத்துப்போன்ற பல் வரிசை, அதன் கீழ் பவளம் போன்ற இதழ் அமைந்திருக்கின்றன. .

அம்பிகையின் பல் வரிசையைச் சுத்தவித்தையின் மூளைகள் என்று கூறும் லலிதா சகசிரதாம்ம்; "சுத்த வித்யாங்குராகார த்விஜ பங்க்தி த்வயோஜ்வலா (25). இங்கே பவளச் செவ்வாயையும் திருநகையையும் ஒருங்கே அமைத்தது போலவே அந்த இரண்டையும் அடுத்தடுத்து வைத்து அந்தத் தோத்திரம் புகழ்கிறது. மற்ருெரு திருநாமம் அன்னேயின் புன்முறுவலைப் பற்றிச் சொல்கிறது. காமேச கிைய இறைவன் அன்னேயின் புன்முறுவலிலே தோன்றும் ஒளி வெள்ளத்தில் மூழ்கித் திணறவை அடைகிருளும். 'மந்தஸ்மித ப்ரபாபூர மஜ்ஜத் காமேச மாநஸா' (28)என்பது அந்தத் திருநாமம். அம்பிகையின் புன்னகையைச் சிறப் பிக்கும் மற்ருெரு திருநாமம் சாருஹாலா (242) என்பது.