பக்கம்:மாவிளக்கு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 மா விளக்கு

பாதகர்கள் அல்ல. பணத்தை எடுத்தாலும் ஆளே ஒன்றும் செய்யமாட்டார்கள் ” என்று சுந்தரவதனன் தனக்குத் தானே தைரியம் கொடுத்துக் கொள்ளச் சொல்லிக் கொண்டான்.

அவனுக்கு அந்தத் தாடிக்காரன் திருடன்தான் என்கிற எண்ணம் கிமிஷத்துக்கு நிமிஷம் வலுத்துக் கொண்டிருந்தது. திருடகை இல்லாவிட்டால் அமானுல் லாவைத் தாக்கியது அவனுக்கு எப்படித் தெரியும் ? அப் படித் திருடகை இருந்தால் பணத்தோடாவது தொலேயட்டும் என்பது அவனுடைய நோக்கம். அதற் காகத்தான் பேச்சை அப்படி மாற்றினன். இருந்தாலும் அவனுடைய முகத்திலே மனத்திலேயிருந்த கலவரத்தின் சாயல் நன்ருகத் தெரிந்தது. அது மேலும் சையத்காத ருக்குச் சந்தேகத்தை உண்டாக்கி விட்டது.

" கம்ம ஊரிலா ஒன்றும் செய்யமாட்டார்கள் ? எவனவது தனியாக ரயில் பெட்டியில் அகப்பட்டுக் கொண்டால் அவனே என்ன செய்தாலும் யாருக்குத் தெரியப் போகிறது : துரங்கும்போது கழுத்தை நெரித்து விட்டுக் கொள்ளேயடித்தால் என்ன செய்ய முடியும் ?” என்று சையத் காதர் கேட்டார்.

இந்த வார்த்தைகளே அவர் பேசினர் என்பதைவிட அவருடைய பயம் பேசிற்று என்று சொன்னல் மிகப் பொருத்தமாக இருக்கும். மனத்திலெழுந்த பயம் அப்படி அவரையும் மீறிக்கொண்டு வெளிவந்து விட்டது. - " தூங்கும்போது கழுத்தை நெரிக்கிறதா ? யார் தாங்கப் போகிருர்கள், பார்க்கலாம் : தூங்குவதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/100&oldid=616189" இலிருந்து மீள்விக்கப்பட்டது