பக்கம்:மாவிளக்கு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரயில் திருட்டு 99

முன்னதாகவே சரியான காரியம் கான் செய்து காண்பிக் கிறேன் ” என்று சுந்தரவதனன் எழுந்தான். அபாய அறிவிப்புச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலே நிறுத்த வேண்டுமென்பது அவனுடைய எண்ணம். அதற்காக அவன் முன்னலே கையை நீட்டிக்கொண்டு காலே எட்டி வைத்தான்.

அவன் உருட்டி விழிப்பதையும், கையை மீட்டுவ தையும் கண்ட சையத் காதருக்கு அவன் தன்னைத் தாக்க வருவதாகவே புலப்பட்டது. உடனே தற்காப்பு ணர்ச்சியால் தூண்டப்பட்டு அவர், “ டேய், அப்படியே கில். இன்னும் ஒரடி காலே எடுத்து வைத்தால் உயிரை வாங்கி விடுவேன் ' என்று கர்ஜனை புரிந்து கொண்டே எழுந்தார். மீசையை முறுக்கினர். தாமணிந்திருந்த கோட்டின் கைகளை மேலே மடக்கிக்கொண்டு விறைப் பாக கின்ருர்.

சுந்தரவதனன் திருடனென்பதில் அவருக்கு இப் பொழுது சந்தேகம் துளிகூட இல்லை. “ இப்படிப் பேசியாவது அவனிடமிருந்து தப்பப் பார்க்கலாம் ” என்று கினைத்தார். ஆனால், அவர் எதிர்பாராத விதமாகக் காரியம் நடந்தது.

ஐயோ, திருடன் திருடன்,-என் உயிர் போச்சே” என்று அலறிக்கொண்டு மூர்ச்சை போட்டுத் தடா லென்று படுக்கையிற் சாய்ந்தான் சுந்தரவதனன்.

சையத் காதர் நடுங்கிப் போனர். அடே, இவன் என்னையா திருடனென்று நினைக்கிருன் இவன் திருட னல்லவா ?’ என்று கூறிக்தொண்டே சுந்தரவதனன் அருகில் வந்தார். அவன் முகம் இருளடைந்து பயங்கர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/101&oldid=616191" இலிருந்து மீள்விக்கப்பட்டது