பக்கம்:மாவிளக்கு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j () () மா விளக்கு

மாகத் தோன்றியது. உடம்பில் உயிர் இருப்பதற்கான அறிகுறிகள் ஒன்றுமே தென்படவில்லே.

சையத் காதருக்கு இப்பொழுது வேருெரு விதமான பயம் பிடித்துக் கொண்டது. ' இவன் செத்துப் போளுல் அதற்கு கானல்லவா. ஜவாப்தாரியாக வேண்டும் ? என்னுல் தானே இவன் இறந்தான் ?

சையத் காதருக்கு என்ன செய்வதென்று புலப்பட வில்லே. அவர் உடம்பெல்லாம் வெடவெட வென்று நடுங்கிற்று. மூச்சுத் திணறிற்று. ' அடடா, கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டு விட்டதே ' என்று பதை பதைத்து அபாய அறிவிப்புச் சங்கிலியைப் பிடித்து இழுத்தார். ஏன் அப்படிச் செய்ய வேண்டுமென்று அவர் யோசிக்கவே இல்லை.

வேகமாக ஒடிக் கொண்டிருந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் கொஞ்ச தூரத்திற்குள் வேகம் குறைந்து சடக்கென்று நின்றது. ரயில்வே போலீசார் ஓடிவந்தார்கள் ; மற்றவர்களும் கீழிறங்கி என்ன விஷயம் என்று காண விரைந்தார்கள்.

போலீசார் உள்ளே நுழையும்போதே சையத் காதர், ! ஐயா இவர் ஏனே திடீரென்று மூர்ச்சை போட்டு விழுந்து விட்டார். மார்படைப்போ என்னவோ தெரியவில்லே ' என்று பயத்தைச் சமாளித்துக் கொண்டு கூறினர். -

" டாக்டர் யாராவது இருந்தால் கூப்பிடுங்கள் ” என்று யாரோ கூவினர்கள்.

முகத்திலே தண்ணிரைத் தெளியுங்கள் ” என்று வேறு யாரோ சொன்னர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/102&oldid=616193" இலிருந்து மீள்விக்கப்பட்டது