பக்கம்:மாவிளக்கு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 மா விளக்கு

நீங்கள் வரும்வரையில் பெட்டிக்குள்ளேயே இருப் பேணு ' என்று திடமாகப் பேசினர்.

"யார், யோ சங்கிலியைப் பிடித்து இழுதது : கானல்லவா இழுத்தேன் சங்கிலியை இழுத்ததைக் கண்டு என்னை நீ தாக்கக்கூட தென்பதற்காக மூர்ச்சை யானதுபோல் பாசாங்கு செய்தேன் ” என்று சுந்தர வதனன் கூறின்ை. அவனுடைய கற்பனைத் திறம் முழு வதும் இப்பொழுது உதவிக்கு வந்துவிட்டது.

பிறகு சையத்காத்ர் எவ்வளவு கூறியும் பயனிருக்க வில்லை. அவர் வார்த்தையை யாரும் நம்பவில்லே. போலீஸ்காரர்கள் அவருடைய பெயரை இதற் குள்ளேயே ரிசர்வேஷன் சீட்டிலிருந்து அறிந்து கொண் டிருந்தும் வழக்கம்போலக் கேள்விகள் கேட்கத் தொடங் கினர்கள். 'உன் பெயரென்ன ?” என்று ஒரு போலீஸ் காரன் கேட்டான்.

" சுயதரிசனம்’ என்ருர் சையத் காதர். மற்ருெரு போலீஸ்காரன் அவர் முதுகிலே ஓங்கி ஒரு குத்து விட்டான்.

" ஏண்டா, பெயர் கேட்டால் பொய்யா சொல்றே ' என்று அவன் கர்ஜித்தான்.

இல்லே ஐயா, என் பெயர் அப்துல் காதர் ” என்ருர் கடுங்கிக்கொண்டே.

மறுபடியும் ஒரு குத்து விழுந்தது. அப்பொழுது தான். இல்லே ஐயா, என் பெயர் சையத் காதர் ” என்ற பதில் வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/104&oldid=616197" இலிருந்து மீள்விக்கப்பட்டது