பக்கம்:மாவிளக்கு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரயில் திருட்டு 103

' இவன் பலே கைதி ; முழுப் பூசனிக்காயைச் சோற்றில் மறைக்கின்றவன் ” என்று விளக்கம் கூறிருன் ஒரு போலீஸ்காரன்.

சையத் காதரைக் கைது செய்து கைக்கு விலங் கிட்டார்கள்.

அரைமணி நேரம் காலம் தாழ்த்து நீலகிரி எக்ஸ் பிரஸ் அரக்கோணம் ஜங்ஷன் வந்து சேர்ந்தது.

சையத் காதரை அங்கே இறக்கினர்கள். சுந்தர வதனன் அரக்கோணம் வரையில்தான் டிக்கெட்டு வாங்கியிருந்ததால் அவனும் அங்கேதான் இறங்க வேண்டும்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் வாக்குமூலம் கொடுத்துவிட்டுச் செல்லலாமென்று அவனே அழைத்துச் சென்ருர்கள். சையத் காதரையும் கைவிலங்கோடு போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு வந்தார்கள்.

சப்-இன்ஸ்பெக்டருடைய கொடுரமான முகத்தைப் பார்த்ததும் சையத்காதருக்கு உள்ள தைரியமும் போய்விட்டது. இனிமேல் உண்மையை ஒப்புக் கொள்ளாமல் வழியில்லை என்று தெரிந்தது.

ஆதலால் அவர் கடந்தது முழுவதையும் ஒளிக் காமல் கூறுவதாகத் தாமாகவே கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். சப்-இன்ஸ்பெக்டர் அதற்கு சம்மதிக்கவே அவர் சொல்ல ஆரம்பித்தார் :

'ஐயா, எனக்கு கெடுகாளாகவே ஒரு ஆசை உண்டு. அதாவது வாழ்க்கைச் சம்பவங்களே யெல்லாம் நேரில் பார்த்துக் கதை எழுதவேண்டுமென்பது அந்த ஆசை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/105&oldid=616199" இலிருந்து மீள்விக்கப்பட்டது