பக்கம்:மாவிளக்கு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழிக்குப் பழி 9

பதில் சொல்லியாகிவிட்டது. இந்தத் தீர்மானத்தை மாத்திரம் கான் மாற்றவே மாட்டேன்.”

இதைக் கேட்டுக் கிழவன் கவலேயடைந்தான். ' முத்து, கான் சொல்லுவதைக் காதிலே வாங்கிக் கொண்டு கொஞ்சம் யோசனை செய்து பார். தோன் ஒரே தீர்மானமாக இருக்கிருய். அப்படியிருக்கிறபோது எதற்கு அவசரம் கிதானமாக சமயம் பார்த்துக் காரியம் செய்யப்படாதா ? உன்னுடைய குடும்பத்தை நினைத்தாவது நீ மறுபடியும் கேசிலே மாட்டிக் கொள்ளப்படாது. அதுதான் என்னுடைய ஆசை.” இப்படிச் சொல்லும்போது கிழவனுக்கு முத்துசாமி யிடத்தில் ஏற்பட்டிருந்த அன்பு தெளிவாக வெளியா யிற்று. -

' அதைப்பற்றிக் கவலேயே வேண்டாம் தாத்தா. சிக்கிக்கொள்ளாமல் பழி வாங்க நான் திட்டம் போட் டிருக்கிறேன். ஆறு வருசமாக ஜெயிலில் எத்தனையோ பேரிடம் பழகிய பிறகு இதுகூடவா எனக்குத் தெரியாது ?”

" முத்து, நான் என்னமோ கிழவன் சொல்லறதாக நினைக்காதே. நானும் உன்னைப்போல ஆத்திரப்பட்டுத் தான் இங்கே வந்திருக்கிறேன். என் வீட்டுக்காரி ஒரு நாள் என்னிடம் கொஞ்சம் கூடக்கூட எதிர்த்துப் பேசி விட்டாள். அதைப் பொறுக்கமுடியாமல் போன குற்றத் துக்கு கான் அனுபவிக்கிறது உனக்குத் தெரியாதா? இப்போ கான் சொல்லுவதெல்லாம் உன்னுடைய இஸ்ட தெய்வம் கறுப்பண்ணசாமி சொல்லுவதாகவே நினைத் துக்கொள்:”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/11&oldid=616008" இலிருந்து மீள்விக்கப்பட்டது