பக்கம்:மாவிளக்கு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரவு ஒரு மணி

நம் காட்டிலே சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலத்திலே ஒரு நாள் இரவு ஒரு மணி. சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மக்வீல் திடுக்கிட்டு எழுந்தார். அவர் படுத்திருந்த அந்த நீளமான அறையின் மற்ருெரு கோடியிலிருந்த இரும்புப் பெட்டியை யாரோ திறந்து, அதிலுள்ள காகிதங்களையும், கடிதங்களேயும் அவசர மாகப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தது. முதலில் அது யாரென்று அவருக்குப் புலப்படவில்லே. இரும்புப் பெட்டிக்குப் பக்கத்திலிருந்து ஒரு சிறு டார்ச்' விளக்கின் ஒளி மட்டும் வீசிக் கொண்டிருந்தது.

உடனே இன்ஸ்பெக்டர் தமது சுழல் துப்பாக்கியைக் கையில் எடுத்துக்கொண்டு மின்சார விளக்கைப் போட் டார். இரும்புப் பெட்டியைச் சோதனை செய்துகொண் டிருந்தாள் ஒரு மாது. திடீரென் று தோன்றிய வெளித் சத்தைக் கண்டு அவள் கலவரத்தோடு திரும்பிப் பார்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/110&oldid=616210" இலிருந்து மீள்விக்கப்பட்டது