பக்கம்:மாவிளக்கு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரவு ஒரு மணி 1 11

போல அவள் சாய்வு நாற்காலியை ஆதாரமாகப் பிடித்துக்கொண்டு கின்று கொண்டிருந்தாள். சின்ன சாமிக்கு அவள் மேல் எவ்விதமான சந்தேகமும் ஏற்பட வில்லே. அதற்கு மாருக அவனேயறியாமல் ஒருவித இரக்கமே பிறக்கலாயிற்று.

அப்பொழுது மக்வீல் உள்ளதைச் சொல்லிவிடு ; இல்லாவிட்டால் இதோ-' என்று கூறிக்கொண்டே டெலிபோன் கருவியிடம் சென்ருர்,

" வேண்டாம், உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள் கிறேன். நான் இதோ இவர் முன்னிலேயில் எல்லாம் சொல்லிவிடுகிறேன் ; போலீஸை மட்டும் கூப்பிடவேண் டாம் !" என்று ஆண்டாள் இரங்கிய குரலில் கூவினுள். அவளுடைய கண்கள், எனக்கு உதவி இல்லையா ? என்று பணிந்து கேட்பன போலச் சின்னசாமியை கோக்கின. அந்தப் பார்வை அவன் மனத்தைக் கவர்ந்து விட்டது. அவனுக்கு இப்பொழுது ஆண்டாளுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த எண்ணமும் இல்லை. அவளுக்கு உதவி செய்வதில் தனக்குத் தீங்கு ஏற்படுவதாக இருந்தாலும் அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. உடனே, நீர் டெலி டோனில் பேசக்கூடாது ' என்று தன் எஜமானனைத் தடுத்தான். மக்வீலுக்கு மூக்கிற்குமேல் கோபம் வந்து விட்டது. ஏதாவது குறுக்கே பேசில்ை உன்னே டிஸ்மிஸ் பண்ணிவிடுவேன். ஜாக்கிரதை 1 என்று உறுமிவிட்டு டெலிபோன் கருவியைக் கையில் எடுத்தார்.

எல்லாம் கூறிவிடுகிறேன்.போலீஸைக் கூப்பிட வேண்டாம்!” என்று ஆண்டாள் மறுபடியும் கதறிள்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/113&oldid=616216" இலிருந்து மீள்விக்கப்பட்டது