பக்கம்:மாவிளக்கு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 13 மா விளக்கு

அதே கணத்தில் சின்னசாமி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கையிலெடுத்த டெலிபோன் கருவியைப் பிடுங்கிக் கம்பியை அறுத்தெறிந்து விட்டான்.

இதை மக்வீல் எதிர்பார்க்கவில்லை. அடே, உன்னே டிஸ்மிஸ் செய்கிறேன் ! தொலே இங்கு கில் லாதே' என்று வெறுப்புடன் கூறிவிட்டு, ஆண்டாளேப் பார்த்து, " உம்...உள்ளதைச் சொல்லிவிடு : இல்லா விட்டால் உன்னைச் சும்மா விட்டுவிடுவேன் என்று நினைத்துவிடாதே ' என்ருர்,

ஆண்டாள். செந்நாய்களிடையில் அகப்பட்ட சிறு மானப் போல, இனித் தப்ப முடியும் என்ற நம்பிக்கை யையே இழந்தவளாகக் காணப்பட்டாள்.) அவள் முகத்தில் அசிரத்தை பிறக்கலாயிற்று. நான் இனி எப்படியும் தப்பமுடியாது. ஆல்ை, நான் ஒரு குற்றமும் செய்யவில்லை என்பதை உங்கள் முன்னிலையில் கூறி விடுகிறேன். பிறகு அவர் தம் இஷ்டப்படி செய்து கொள்ளட்டும் ' என்று சின்னசாமியைப் பார்த்துக் கூறலாள்ை. ' என் தகப்பனர் சீனிவாச நாயுடு மதுரை ஜில்லாவில் ஒரு கிராமத்தில் வசிக்கிரு.ர். அவருக்கு தேச சேவையாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை உண்டு. இந்தச் சென்னே நகரத்தில் ஸ்தாபிக்கப் பட்டிருக்கும் பாரத சேவைக் கழகம் நாட்டின் விடுதலைக்காக நல்ல வேலை செய்கிறது என்று கேள்விப் பட்டு, அவர் அதற்குப் பல தடவைகளில் பொருளுதவி செய்துவந்தார். ஆனல், அவர் கேரில் இங்கு வந்து அந்த ஸ்தாபனத்தைப் பார்த்ததில்லே அதில் சம்பந்தப் பட்டவர்களே கேரில் சந்தித்ததுகூடக் கிடையாது-தேச சேவை என்ருல் அவருக்குப் பற்று அதிகம்-பணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/114&oldid=616218" இலிருந்து மீள்விக்கப்பட்டது