பக்கம்:மாவிளக்கு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரவு ஒரு மணி 115

“ ஆனால், அது பலிக்கவில்லை. இனி என் தங்தைக்கு வேறு கதியில்லை. அவரோ பணம் கொடுக்கக் கண்டிப் பாக மறுப்பார். அதல்ை அவர் -எனது அருமைத் தங்தை - தமது அக்திய காலத்தைச் சிறையில் கழிக்க வேண்டியதுதான். பத்து வருஷங்களாம் ! தள்ளாத காலத்தில் அவர் சிறையிலே கிடக்கவும் நான் அவரை * ** . . . . . . واستاوه

இதற்கு மேல் அவளால் ஒன்றும் பேச முடிய வில்லை. மூச்சுத் தடுமாறுவதுபோல் காணப்பட்டது. மறு நிமிஷம் அவள் திண்டாடிக்கொண்டு சாய்வு நாற் காலியின் பின்னல் விழப்போள்ை.

அவன் கூறியவற்றை யெல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த சின்னசாமிசட்டென்று பாய்ந்து அவளேக் கீழே விழாமல் தாங்கினன். ஆண்டாளும் அவனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

சிறிது நேரம் சென்றது. ஆண்டாள் மூர்ச்சை தெளிந்து எழுந்தாள். மக்வீல், “ அதெல்லாம் இருக் கட்டும், கடிதங்களே எடுத்தாயா ?” என்று கேட்டார்.

“ எடுக்கவில்லே ; அதற்குள்தான் பார் த் து விட்டீரே !”

"நான் இப்பொழுது சோதனை செய்யப்போகிறேன். பிறகு நீ இங்கிருந்து மரியாதையாகப் போய்விட வேண்டும், இரண்டு சனியன்களும் தொலேயுங்கள் !” என்ருர் இன்ஸ்பெக்டர்.

" தெய்வமே!” என்று ஆண்டாள் பெருமூச்சு விட்டு விட்டு, ' சரி, உங்கள் இஷ்டம்போல் செய் யுங்கள் ” என்ருள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/117&oldid=616224" இலிருந்து மீள்விக்கப்பட்டது