பக்கம்:மாவிளக்கு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 0 மா விளக்கு

' கறுப்பண்ணசாமியா ? அந்த சாமியைப்பற்றி என்னிடம் பேச வேண்டாம், தாத்தா. அது வெறுங் கல்லு.”

கிழவன் கொஞ்சம் தயங்கினன். முத்துசாமிக்கு மனசிலே படும்படி வேறு எப்படிச் சொல்லாம் என்று யோசித்தான். .

" முத்து, சாமியைப் பற்றிக் கூட நினைக்க வேண்டாம். உன் பையனே நினைத்துப் பார். அவனுக் காகவாவது நீ மறுபடியும் ஜெயிலுக்கு வரப்படாது.”

  • பையன ? அவனைப் பற்றி இப்போ கினைத்து என்ன பிரயோசனம் ? எனக்கு தண்டனை கிடைத்த போது அவனுக்கு ஆறு வயசு. இப்போ அவன் எப்படி இருக்கிருனே ? நான்தான் படிக்காத காட்டு முட்டா ளாகப் போய்விட்டேன். அவனேயாவது படிக்க வைக்க வேணுமென்று ஒரே ஆசையாக இருந்தேன். அதெல் லாம் போச்சு. என் குடும்பம் தொலேந்தது. அவள் இப்போ எப்படி இருக்கிருளோ ? வயசான என் தகப்பனர் என்ன கஸ்டப்படுகிருரோ ? நான் ஒருத்தன் கூலி வேலே செய்துதான் அத்தனை பேரும் காலம் தள்ளி ர்ைகள்.”

இப்படிக் கூறும்போதே முத்துசாமியின் கண்கள் இரத்தம் போலச் சிவந்தன. தந்தை உயிரோடிருக் கிருரா என்றுகூட அவனுக்குத் தெரியாது. மனைவி யைப் பார்த்து ஆறு வருஷங்களாகிவிட்டன. அவள் இப்போது என்ன கஷ்டப்படுகிருளோ ? அவள் கூலி வேலை செய்து சம்பாதித்தால்தான் அந்த மூன்று ஜீவன் களுக்கும் சோறு கிடைக்கும். ஜெயிலுக்குள்ளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/12&oldid=616010" இலிருந்து மீள்விக்கப்பட்டது