பக்கம்:மாவிளக்கு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால யந்திரம் 131

சகோதரர் என்ருல் அடிமை யேது ? எல்லோருக்கும் சமமாக உணவு, உடை, படிப்பு, சுதந்திரம் எல்லாம் இருக்கும். ஆப்பிரிக்க நீக்கிரோவும், ஐரோப்பிய வெள்ளையனும் தோள்மேல் தோள் போட்டுக்கொண்டு இன்பத்தை காடிச் செல்லும் காலம் நெருங்கிவிட்டது.” இப்படிச் சொல்லும்போதே அவன் கண்கள் பிர்காசித்தன. முகம் மலர்ந்தது. அவன் ஏதோ முன்னல் தோன்றும் ஒரு கந்தர்வ உலகத்தைப் பார்த்துக் கொண்டு பேசுவதுபோல் காணப்பட்டான். அவனுடைய ஆர் வத்தில் என் உள்ளம் கவரப்பட்டாலும், என் உதட்டில் ஒரு சிரிப்புத்தான் தோன்றியது. o

சரி, அதிருக்கட்டும், உன்னுடைய விஞ்ஞான ஆராய்ச்சியெல்லாம் எவ்வளவு தூரத்திலிருக்கிறது ? என்றேன்.

இப்படித் திடீரென்று பேச்சை மாற்றியது அவனுக்குக் கஷ்டமாகத் தோன்றியது. அவளுல் உடனே மனத்தை முதல் விஷயத்திலிருந்து திருப்ப முடியவில்லை. கொஞ்ச நேரம் எதைப்பற்றியோ மெளன மாகச் சிக்தனை செய்து கொண்டிருந்தான். -

விஞ்ஞான ஆராய்ச்சியும் அவனுக்கு ஒரு பைத்திய மாகையால் பிறகு அதைப் பற்றியும் ஆரம்பித்து விட்டான். -

' கான்காவது பரிமாணம் ஒன்று உண்டென்பது தெரியுமா ? அதுதான் காலம்.” -

" அது கிடக்கிறது-என்னமோ எதிர் கால ఉః குள்ளே போகக் கூடிய யந்திரம் உண்டாக்கிக் கொண் டிருந்தாயே, அது என்ன ஆச்சு ” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/123&oldid=616236" இலிருந்து மீள்விக்கப்பட்டது