பக்கம்:மாவிளக்கு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால யந்திரம் 127

உள்ள ஒரு பிரபல ஜேரிஸ்யனிடம் போயிருப்பதாகவும், காளைக்குத் திரும்புவான் என்றும் வீட்டில் சொன் ர்ைகள்.

38-3-44 : குமரேசன் வந்தான். எங்கே, சோதிடம் கற்றுக் கொள்ளப் போயிருந்தாயா? இனிமேல் ஜாதகம் பார்க்க வேறு பக்கம் போக வேண்டியதில்லை ” என்று பரிகாசம் செய்தேன்.

  • சோதிடம் நல்ல சாஸ்திரங்தான் ; ஆனால், அதை வளர்ச்சி செய்யத்தான் இப்பொழுது வல்லவர்கள் யாரு மில்லை. நமது முன்னேர்கள் அற்புதமான ஒரு சாஸ்திரம் உண்டாக்கி யிருக்கிருர்கள். அதைத் தொடர்ந்து அபிவிருத்தி செய்ய வேண்டும்.”

' ஆமாம், இதிலே ஏன் தீடீரென்று நுழைந்து விட்டாய் ??

சோதிடம் கடந்தவற்றையும், வரப்போகிறதையும் கூறுகிறதல்லவா ? அது என் ஆராய்ச்சிக்கு எவ்வளவு தூரம் உதவியா யிருக்குமென்று தெரிந்து கொள்ள விரும்பினேன். எனது யந்திரத்திற்கு இதில் ஏதாவது யோசனை கிடைத்தாலும் கிடைக்கலாம்.”

" ஜேர்ஸ்யத்திற்கும், யந்திரத்திற்கும் என்ன சம்மந்தம் ?”

" நான் சம்மந்தம் உண்டாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். எதிர்காலத்தை ஒரு யந்திரமூலம் காண முடியுமானல் அது சிறிதும் பிழையில்லாம லிருக்கும்-அதைத்தான் நான் செய்யப் பேகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/129&oldid=616249" இலிருந்து மீள்விக்கப்பட்டது