பக்கம்:மாவிளக்கு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வித்தியாசம்

கமலநாதனுடைய வாழ்வெல்லாம் போய்விட்டது. அவனுடைய ரேடியோ மாடல் பங்களா, ஷெவர்லீ மோட்டார் கார், கோச்சு வண்டி எல்லாம் கடன் காரர்கள் வசமாகிவிட்டன. சமையலுக்கு இரண்டு ஆள், பூந்தோட்டம் பார்க்க ஒரு ஆள், பூட்ஸ் துடைக்க வேருெருவன்-இப்படியிருந்த ஆட்களெல்லாம் வேறி டங்களில் வேலை பார்த்துக் கொண்டார்கள். இப் பொழுது அவன் பாதசாரியாகத் தெருவில் கடந்து கொண்டிருக்கிருன். அந்தத் தெருவிலே அவன் வந்ததே கிடையாது. ஒருவேளை வந்திருந்தாலும் காரில் தான் வந்திருக்கலாம். அவனுடைய பாதம் அந்த மண்ணில் பட்டதில்லை. ஆனால், அந்தக் காலம் மலே யேறிவிட்டது. இனி அவன் எங்கு சென்ருலும் கால் கடையாகத்தான் செல்லவேண்டும்.

அவனுடைய தோற்றத்தையும் உடையையும் கண்டு பலர் ஆச்சரியத்தோடு உற்றுப் பார்க்கிருர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/137&oldid=616266" இலிருந்து மீள்விக்கப்பட்டது