பக்கம்:மாவிளக்கு.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வித்தியாசம் 137

அவன் தைரியமாகப் பெரிய பெரிய வியாபாரம் செய்தான். அதிருஷ்டம் அவன் பக்கம் இருக்கும் வரையில் எதிர்பார்த்ததற்கும் மேலே லாபம் கிடைத்து வந்தது. பணம் குவிந்தது. அதைக்கொண்டு பங்களாக் கட்டினன், மோட்டார் வாங்கினன். பல வேலையாட்களே நியமித்தான். தடபுடலாக வாழ்க்கை கடத்திவந்தான். ஆன்ை, திடீரென்று எல்லாம் போய்விட்டது. கடைசி யாகச் செய்த பஞ்சு வியாபாரத்தில் பெரிய கஷ்டம் உண்டாயிற்று. சொத்து சுகமெல்லாம் மாயமாக மறைந்துவிட்டன. பாங்கியில் ஒரு சல்லியில்லே. தனது சட்டைப் பையில் அப்பொழுதிருந்த ரூபாய் கோட்டு ஒன்றுதான் பாக்கி. அது எத்தனே நாளேக்கு வரப்போகிறது ? அதை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும் அவன் மெதுவாகப் பணப் பையை எடுத்து ஒருதரம் பார்த்தான். ஆமாம், அந்த கோட்டு பத்திரமாக உள்ளேயிருந்தது. இருந்து என்ன செய்வது ? வியாபாரம் செய்ய அது போதுமா ? நான்கு நாள் செலவிற்குக்கூட அது போதாது. கமல நாதனுக்குத் தன்ன அறியாமலே சிரிப்பு வந்தது. சிரித்துக்கொண்டே அவன் சுற்றிலும் பார்த்தான்.

அந்தச் சமயத்தில் வேருெரு மனிதன் அவன் அமர்ந்திருந்த பெஞ்சியின் மறு கோடியில் வந்து உட்கார்ந்தான். அவனுக்குச் சுமார் 45 வயதிருக்கலாம். கமலநாதனுக்கும் அதே வயதுதான். ஆனால், அவ னுடைய உடை தோற்றம் முதலியவற்ருல் அவன் ஏழை என்று சுலபமாகத் தெரிந்துகொள்ளலாம். ஏன் ? அவன் ஒரு ஏழை ஆரம்பப் பள்ளிக்கூட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/139&oldid=616271" இலிருந்து மீள்விக்கப்பட்டது