பக்கம்:மாவிளக்கு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 மா விளக்கு

பெயர். மரக் கூட்டத்தால் அங்கே ஒரே இருட்டாக இருந்தது. அதிலே ஒரு பக்கத்தில் கறுப்பண்ணசாமி கோயிலிருந்தது. இரவிலே அங்கு யாரும் இருக்க மாட்டார்கள். கறுப்பண்ணசாமி கோயிலைப் பூட்டி வைப்பது கிடையாது. பூட்டி வைத்திருந்தாலும் முத்து சாமி பூட்டை உடைக்கத் தயங்கியிருக்கமாட்டான்.

அவன் கோயிலுக்குள்ளே புகுந்தான். கறுப் பண்ண சாமியின் சிலையை ஆத்திரத்தோடு அசைத்துப் பிடுங்கின்ை. அந்தி சந்தி அனவரதமும் கும்பிட்ட அந்தச் சிலேயைப் பலிபீடத்தின் மேலேயே போட்டு நூறு சுக்கலாக உடைத்தான். தனது எண்ணங்களில் ஒன்று நிறைவேறிவிட்டது என்று மகிழ்ச்சியடைந்தான். அடுத்த எண்ணத்தையும் கிறைவேற்றிவிட வேண்டு மென்று அங்கேயே காத்திருக்கலானன்.

முத்துசாமிக்குக் கறுப்பண்ணனிடத்திலே எத்தனை பக்தியிருந்ததோ அத்தனை பக்தி வேலுச்சாமிக் கவுண்ட ருக்கும் உண்டு. அவர் தினமும் அதிகாலேயில் எழுந்து தமது பண்ணேயைக் கவனிப்பதற்கு முன்பு கறுப்பண்ண சாமி கோவிலுக்கு வந்து கும்பிட்டுப் போவார். இருட்டோடே அவர் அங்கு வருவது பலருக்குத் தெரியா தென்ருலும் முத்துசாமிக்குத் தெரியும். அவர் பண்ணையில் அவன் பல நாள் கூலி வேலை செய்திருக் கிருன். அதனல் அவர் வருகையை எதிர்பார்த்திருந்தான்.

வேலுச்சாமிக் கவுண்டர்தான் காட்டுப்பாளே யத்தில் பெரிய பண்ணைக்காரார். ரொக்கமும் பூஸ்திதியும் நிறைய உடையவர். நல்ல செல்வாக்கும் அதிகாரமும் அவருக்குண்டு. அவருடைய பேச்சுக்கு அட்டி சொல்லு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/14&oldid=616014" இலிருந்து மீள்விக்கப்பட்டது