பக்கம்:மாவிளக்கு.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 மா விளக்கு

வாத்தியார் என்றே தெரிந்துகொள்ளலாம். வாத்தியார் சாயல் அவன் உருவ த்தில் தெளிவாகப் பதிந்திருந்தது.

ஆல்ை, அவன் முகம் இப்பொழுது மலர்ந்திருக் கிறது. தலே சற்று நிமிர்ந்திருக்கிறது. வில்லுப் போன்ற முதுகுக் கூனல் கொஞ்சம் நேராகியிருக்கிறது. அவன் கண்களிலே என்றுமில்லாத ஒரு புதிய கம்பிக்கை யின் ஒளி சுடர் விடுகின்றது. அவற்றிற்கெல்லாம் காரணம் இல்லாமலில்லை. .

அவன் பெயர் முருகேசன் , முருகேச வாத்தியான். இருபத்தைந்து வருஷங்களாக ஜில்லா போர்டு ஆரம்பப் பாடசாலையில் வேலே பார்த்திருக்கிருன். கோயமுத்துரர் ஜில்லாவில் அவன் கால் படாத தாலுக்காவே கிடையாது. ஒவ்வொரு தாலுக்காவிலும் அவன் பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிருன். அவனுடைய சோக்ம் படிந்த குரல் எங்கும் கேட்க வேண்டுமென்று கினைத்தோ என்னவோ அவனுக்கு வெவ்வேறு இடங்களுக்கு மாற்றம் கிடைத்துக்கொண்டே இருக்கும். முருகேச னுக்கு வாத்தியார் வேலே கொஞ்சமும் பிடிக்கவில்லை. எப்படியாவது அதைவிட்டுத் தொலைக்க வேண்டு மென்று ஆசை கொண்டிருந்தான். ஆனால், எப்படித் தொலைப்பது ? தைரியமாக ஆரம்பத்திலேயே செய் திருந்தால் செய்திருக்கலாம். வருஷம் ஏற ஏறக் குடும்ப பாரமும் ஏறிக்கொண்டே வருகிறது. கலியாணம் செய்து கொள்ளாத முன்பு இருக்கிற தைரியம் பின்னல் வருகிறதில்லை. பிறகு குழந்தைகள் வேறு பிறந்து விடுகின்றன. கவலையும் பொறுப்பும் பயங்கரமாகக் காட்சியளிக்கின்றன. மேலும் வாத்தியார் வேலையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/140&oldid=616273" இலிருந்து மீள்விக்கப்பட்டது