பக்கம்:மாவிளக்கு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 மா விளக்கு

மனைவியின் கையிலே உள்ள தங்க வளையல்களை விற்ருல் ஒரு நூறு ரூபாய் கிடைக்கும். சீதனமாக வந்த அவைகளே விற்பதில் ஒரு ஆக்ஷேபமும் இல்லே ; மனேவிக்கும் முழுச் சம்மதந்தான். ஆனால், இன்னும் ஒரு நூறுக்கு என்ன செய்வது ? பெட்டிக்கடை செய்யவே அந்த ஒரு நூறு பத்தாது. பிறகு சாமான் களுக்கு என்னசெய்வது ? அவனே நம்பி யாரும் நூறு ரூபாய் கொடுக்க முன்வரவில்லை. மேலும் முருகேச னுக்குத் தனது கோக்கத்தைப் பிறரிடம் எடுத்துரைக்கத் தைரியம் வரவில்லை. கையில் இருக்கும் வேலையை விட்டுவிட்டுக் கடை வைக்கப் போரும்ை ” என்று சிரிப்பார்கள் என்று பயம். இந்த நிலையிலே அவன் வாத்தியாராகவே காலங்கடத்த வேண்டியதாயிற்று. ஆனல் பல வருஷங்கள் இவ்வாறு சென்ருலும் அவனுடைய ஆசை மறையவேயில்லே. பெண் குழந்தைகள் இரண்டிற்குக் கலியாணம் செய்யக்கூடிய பருவம் வந்துவிட்டது. அதனால் இப்பொழுது எப்படி யாவது ஆரம்பப் பாடசாலேக்குத் தலே முழுகிவிட்டுப் பெட்டிக் கடை வைக்க வேண்டுமென்று அவன் தவித்தான். யுத்த காலத்திலும், அதற்குப் பிறகும் பெட்டிக் கடைகளுக்கு கல்ல வரும்படி ஆல்ை, என்ன செய்வது? ஒரு நூறு ரூபாய் கிடைக்கவில்லையே என்று முருகேசன் மனம் நைந்து கிடந்தான்.

அந்தச் சமயத்தில் எதிர்பாராத விதமாக அவனுக்கு ஒரு யோகம் பிறந்தது. அவனிடம் முதல்முதலில் அrராப்பியாசம் செய்துகொண்ட ஒரு மாணவன் கல்லூரிப் படிப்பை யெல்லாம் முடித்துக்கொண்டு வக்கீலாக அமர்ந்தான். அவன் எடுத்துக்கொண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/142&oldid=616277" இலிருந்து மீள்விக்கப்பட்டது