பக்கம்:மாவிளக்கு.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 மா விளக்கு

பொருளிருந்தால் போதும். ஒரு பெட்டிக் கடை வைப்ப தற்கு ஆஸ்தி இருந்தால் போதும். கன்ருகச் சம்பா திக்கலாம். சந்தோஷமாக இருக்கலாம்.'

'உன்னிடம் நிறையப் பணம் இருக்கிறது போலத் தோன்றுகிறது. அதனால்தான் இவ்வளவு கம்பிக்கை யோடு பேசுகிருய். என்னிடத்தில் அப்படிப் பணம் இல்லை. இதோ இந்தச் சட்டைப் பையில் உள்ளதைத் தவிற என்னிடம் வேறு ஒன்றும் இல்லே ' என்று சட்டைப் பையைத் தொட்டுக் காண்பித்தான் கமல நாதன்.

என்னிடமும் அப்படித்தான். என் பையிலே உள்ளதைத் தவிற வேறு சல்லிக் காசுகூடக் கிடையாது’ என்று முருகேசன் எதிர்வாதாடினன். *

என்னிடம் உள்ள பணத்தை வைத்துக்கொண்டு நான் ஒன்றுமே செய்ய முடியாது. அது ஒரு காரியத் திற்கும் உதவாது. நான்கு நாட்களுக்குப் பட்டினி யில்லாமல் சாப்பிடலாம். அப்புறம் சாகவேண்டியது தான். நான் எந்த வேலே செய்வதற்கும் லாயக்கற்றவன். மோட்டார் ஒட்டவேண்டுமானல் தெரியும். ஆனால், நான் யாரிடமாவது டிரைவராகப் போகமுடியுமா ? அதுவும் முடியாது. என்னே யாரும் வேலைக்கு வைத்துக்கொள்ள மாட்டார்கள். கமலநாதன் எழுந்திருந்து நடக்க ஆரம் பித்தான்.

'நீங்கள் இப்படி அதைரியப் படக்கூடாது. கையி லிருக்கிற முதலே வைத்துக்கொண்டு ஏதாவது தொழில் செய்யுங்கள். எல்லாம் சரிப்பட்டு விடும் என்று தைரியம் கூறினன் முருகேசன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/144&oldid=616282" இலிருந்து மீள்விக்கப்பட்டது