பக்கம்:மாவிளக்கு.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வித்தியாசம் 罩4器

கமலநாதனுக்கு அந்த வாத்தியாரின் பேச்சைக் கேட்டுச் சிரிப்பு வந்தது. என்னிடமுள்ள பணத்தின் மதிப்புத் தெரியாமல் நீ இவ்வாறு சொல்லுகிருய். என்னிடமிருப்பது இவ்வளவுதானென்று தெரிந்தால் பிறகு பேசமாட்டாய். உன்னிடம் ரொம்ப இருக்கும்; அதல்ைதான் உனக்கு இத்தனை தைரியம்.'

‘ என்னிடம் அதிகமாக ஒன்று மில்லை. இருந்தாலும் அது போதும் எனக்கு.' -

இதைக் கேட்டதும் அவனிடமுள்ள தொகை எவ்வளவு என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்று கமலநாதனுக்கு ஆசையுண்டாயிற்று. நான் என்னிட முள்ள பணத்தைக் காண்பிக்கிறேன். நீ உன்னிட. முள்ளதைக் காண்பி பார்க்கலாம்:

சரி, அப்படியே பார்ப்போம் என்ருன் முருகேசன். இருவரும் ஒரே சமயத்தில் சட்டைப் பைக்குள் கையை விட்டுப் பணத்தை எடுத்து நீட்டினர்கள்.

ஒவ்வொருவர் கையிலும் ஒரு நூறு ரூபாய் கோட்டு இருந்தது !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/145&oldid=616284" இலிருந்து மீள்விக்கப்பட்டது