பக்கம்:மாவிளக்கு.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீதன ஆகு

பனே ஒலை வேய்ந்த சிறிய குச்சு வீடு. திண்ணை யில்லே. தரையோடு ஒட்டிய தாழ்வாரம் உண்டு. அதிலே மேற்கு மூலையில் அடுப்பு, அரிவாள்மனே, ஒலைப் பிரி, கரித்துணி, இரண்டு மூன்று சட்டி பானைகள், சுள்ளிக் குச்சிகள் கிடந்தன. கிழக்கு மூலையிலே வாச லுக்குச் சற்று அருகே ஒரு அம்மியும், அதன் மேலே ஒய்யாரமாக வீற்றிருக்கும் குழவியும் இருந்தன. பக்கத்திலே மூங்கிற் சட்டக் கயிற்றுக் கட்டில். அதிலே ஒரு கிழவன் இருமிக்கொண்டே படுத் திருந்தான்.)

தாழ்வாரத்தைச் சேர்ந்தாற்போல இருப்பதுதான் கிழவனுடைய சொத்து சுகங்களைக் கண்ட வீடு. உள்ளே சொத்து ஒன்றும் இன்றைக்குக் கிடையாது. மழை காலத்திலே ஆட்டுக் குட்டியை அதிலே அடைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/146&oldid=616286" இலிருந்து மீள்விக்கப்பட்டது